என் பெற்றோர்களை மைதானத்திற்கு வர அனுமதிக்கவே மாட்டேன்.. அதற்கான காரணம் இதுதான் – ரோகித் சர்மா பேட்டி

0
0

​இந்திய அணியின் ஸ்டார் வீரர் ரோகித் சர்மா தனது பெற்றோர் குறித்துப் பேசிய சுவாரஸ்யமான தகவல்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. ஸ்டேடியத்திற்கு வந்து நேரில் பார்ப்பதைவிட, பெற்றோர் ஏன் டிவியில் போட்டிகளைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

​ரோகித் சர்மா தன் பெற்றோர் குறித்துப் பேசும்போது, “ஸ்டேடியத்தில் இருந்து மேட்ச் பார்ப்பது ரொம்பவும் டென்ஷனான விஷயம். நாமே கிரவுண்டில் இவ்வளவு பிரஷரை உணரும்போது, நம்மைப் பெற்ற பெற்றோர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து அவர் மேலும் பேசுகையில், “அவர்கள் ஸ்டேடியத்திற்கு வருவதை விரும்புவதில்லை, அதனால்தான் அவர்கள் வீட்டிலிருந்தபடியே மேட்ச் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

​இது குறித்து ரோகித் சர்மா மேலும் பேசும்போது, “வீட்டில் இருந்தால் என்னைப் பற்றி கவலைப்படாமல் நிம்மதியாக இருக்க முடியும், ஒருவேளை நான் அவுட்டாகிவிட்டால் அவர்கள் பாட்டுக்கு நிம்மதியாகத் தூங்கப் போய்விடலாம்” என்று நகைச்சுவையாகவும் யதார்த்தமாகவும் ஆழமாக வலியுறுத்தி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -