அர்ஷ்தீப் சிங் பேராசை அதிகம்.. அதனால்தான் அந்த தவறு நடந்தது.. மார்க்கை குறைத்து விட்டேன் – அஜய் ஜடேஜா கருத்து

0
0

​நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் செயல்பாடு குறித்தும் அர்ஷ்தீப் சிங் குறித்து முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா சுவாரசியமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

​இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், வீரர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்து அஜய் ஜடேஜா விரிவாக அலசி ஆராய்ந்து பேசியுள்ளார்.

- Advertisement -

​இதுகுறித்து அஜய் ஜடேஜா பேசும்போது “அன்ஷுல் கம்போஜிற்கு பத்து மதிப்பெண்கள் கொடுப்பேன். ஆகிப் நபி வீசிய ஓவர்களின் எண்ணிக்கையை விட ஒரு மதிப்பெண் அதிகமாக வழங்கி ஏழு மதிப்பெண்கள் தருவேன். குர்னூர் பிரார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், எனவே அவருக்கு ஒன்பது மதிப்பெண்களும், அர்ஷ்தீப் சிங்கிற்கு ஒன்பது மதிப்பெண்களும் கொடுப்பேன்” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து பேசிய அவர் “அர்ஷ்தீப் சிங் தனது கடைசி ஓவரில் சற்று பேராசைப்பட்டு (க்ரீடி) வீசியதால் அவரது மதிப்பெண்ணில் இருந்து ஒன்றை குறைத்துவிட்டேன். அதேபோல குர்னூர் பிரார் அதிக ஆர்வத்தைக் காட்டி பந்தை மிகவும் ஷார்ட்டாக வீசியதால் அவருக்கும் ஒரு மதிப்பெண்ணைக் குறைத்துள்ளேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து மண்ணில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். அனுபவமும் இளமையும் கலந்த இந்திய பந்துவீச்சு கூட்டணி எதிரணிக்கு கடும் சவாலாக அமைந்து வருகிறது.
​

- Advertisement -