ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி சரியில்லை.. இந்த தந்திரம் பழைய காலத்தில் எடுபடலாம் – அம்பதி ராயுடு கருத்து

0
2

​இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் கையாண்ட கேப்டன்ஷிப் யுக்திகள் மற்றும் சில தவறான முடிவுகள் குறித்து இந்திய முன்னாள் வீரர் அம்பதி ராயுடு தனது கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

​நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த இலக்கை எதிரணி எளிதாக சேஸ் செய்து வெற்றி பெற்றதுடன், களத்தில் கேப்டன் மேற்கொண்ட சில பவுலிங் மாற்றங்கள் ஆட்டத்தின் போக்கை எதிரணிக்கு சாதகமாக மாற்றிவிட்டன.

- Advertisement -

​இதுகுறித்து அம்பதி ராயுடு பேசும்போது “அந்த தந்திரம் முன்பு பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எப்போதுமே நல்லதாக இருந்ததில்லை. ஒருவேளை டி20 கிரிக்கெட் கிரிக்கெட்டின் ஆரம்ப கட்டங்களில் அது வேலை செய்திருக்கலாம், ஆனால் நீங்கள் ஒரு பார்ட்-டைமர் பவுலரை கொண்டுவரும்போது அதற்கு எதிரணி பேட்டர்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஒரு பேட்டராக அந்த ஆறு பந்துகளையும் அதிகளவில் பயன்படுத்திக்கொள்ள விரும்புவீர்கள். சரியாக அதுதான் அங்கே நடந்தது, அது ஆட்டத்தின் முமெண்டத்தையும் மாற்றிவிட்டது” என்று கூறி இருக்கிறார்.

​மேலும் இதுகுறித்து அம்பதி ராயுடு தொடர்ந்து பேசும்போது “கிரீஸில் செட்டிலான பேட்டர் யாரும் இல்லையென்றால் புவனேஸ்வர் குமாரை தொடர்பு பவுலிங் செய்ய வைத்திருக்கலாம். டிம் சீபர்ட் ஏற்கனவே அவருக்கு எதிராக இரண்டு ஓவர்கள் ஆடியிருந்தார். எனவே, அந்த கட்டத்தில் நான் வேறு பவுலரை முயன்றிருப்பேன். ஏனென்றால் தொடர்ந்து மூன்று ஓவர்கள் வீசுவது கடந்த காலங்களிலும் பவுலர்களுக்கு மிகவும் கடினமாக இருந்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கவுதம் கம்பீர் விஷயத்தில், அவர்கள் நிகழ்நேரத்தில் தகவல்களைப் பரிமாற விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஸ்ரேயாஸ் ஐயருக்கு அதிகப்படியான உள்ளீடுகளும் தகவல்களும் பிடிக்காது. காலத்திற்கேற்ப மாற வேண்டும் என்பதால் அது இறுதியில் மாற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -