இந்தியா நியூசிலாந்து டி20 தொடரில் கிளின் பிலிப்ஸ் தொடர் நாயகன் விருது பெற்றார். மேலும் தொடரில் தான் வெளிப்படுத்திய அமைதியான மனநிலை மற்றும் ஒவ்வொரு பந்தையும் அதன் தரம் பார்த்து எதிர்கொண்டு, எதிரணிக்கு இரையாகாமல் தானே வேட்டையாடும் ஹன்டராகக் களமிறங்கியது குறித்து கிளின் பிலிப்ஸ் பேசி இருக்கிறார்.
இந்தியாவின் பவுலிங் யூனிட்டை, குறிப்பாக ஸ்பின் பவுலிங்கை அட்டாக் செய்ய வேண்டிய அவசியத்தையும், வருண் சக்கரவர்த்தி வீசிய முக்கியமான ஓவரில் எடுத்த ரிஸ்க் மற்றும் சைபர்ட்டின் மிரட்டலான பேட்டிங் மோமெண்டம் குறித்தும் அவர் விவரித்துள்ளார்.
கிளின் பிலிப்ஸ் பேசும்போது “நாம் பேசிக் கொண்டது போல அந்த அமைதியும் நிதானமும் ஒரு நல்ல உணர்வைத் தருகிறது. தெளிவான மனதுடன் களமிறங்கி ஒவ்வொரு பந்தையும் அதன் தரம் பார்த்து ஆடுவது அவசியம். ஒரு பிரேவாக இல்லாமல் கொஞ்சம் ஹன்டராக இருக்க முயன்றேன்.” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து அவர் பேசும்போது “இன்று ஸ்பின் பவுலிங்தான் அடிக்கப்பட வேண்டிய பவுலிங் என்பதைப் புரிந்துகொண்டேன். இந்திய வீரர்கள் அதை எங்களுக்கு எதிராகச் செய்தார்கள். சக்கரவர்த்தி மீண்டும் பந்துவீச வந்தபோது அது ஒரு மேக் ஆர் பிரேக் ஓவராக இருந்தது. நாங்கள் ஆட்டத்தில் முன்னிலை பெறப் போகிறோமா அல்லது அவர் விக்கெட்டுகளை வீழ்த்தப் போகிறாரா என்ற நிலைமை இருந்தது. அந்த ரிஸ்க் எடுப்பதற்கு மதிப்பு இருந்தது. தொடக்கத்திலும் முழுவதுமாக சைபர்ட் பேட் செய்த விதம் அருமையாக இருந்தது.” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் நிறைவு செய்யும்போது “இது வீரர்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையைத் தரும். நீண்ட ஃபார்மட்டில் ஆட்டத்தின் போக்கை இன்னும் கூடுதலாகப் புரிந்து கொண்டு விளையாடலாம். ஒரு பந்தாக அந்த கணத்தில் கவனத்தைச் செலுத்த முயற்சித்தேன். (ஹாம்ஸ்ட்ரிங் பரவாயில்லையா?) ஆம், அது நன்றாகவே ஒத்துழைத்தது.” என்று கூறி இருக்கிறார்.






