இந்திய அணியின் இளம் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டிவென்டி போட்டியில் சஞ்சு சாம்சன் தனது வழக்கமான பேட்டிங் பொசிஷனை விட்டுக் கொடுத்து இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளித்ததை மிகவும் பாராட்டியுள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பிசிசிஐ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் சுயநலமின்றி சக வீரர்களின் வெற்றியை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். அணியின் இந்த ஒற்றுமையே தற்போதைய வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபிஷேக் சர்மா சஞ்சு சாம்சனின் தியாகம் குறித்தும் இளம் வீரர்களின் அதிரடி ஆட்டம் குறித்தும் விரிவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அபிஷேக் சர்மா பேசும்போது “கடந்த போட்டியில் சஞ்சு பாய் சிறப்பாக பேட்டிங் செய்த போதிலும், அணிக்காக தனது வழக்கமான ஓப்பனிங் பொசிஷனை விட்டுக்கொடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அவருடைய இந்தச் செயல் அவரது உண்மையான கேரக்டரை வெளிக்காட்டுகிறது. நமது அணியில் அனைவரும் சுயநலமின்றி மற்றவர்களின் வெற்றிக்காக மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதை இதன் மூலம் நாம் காண முடிகிறது; இதுவே ஒரு சிறந்த அணியின் அடையாளமாகும்” என்று கூறி இருக்கிறார்.






