நமன் திர் இதயத்துடிப்பை செக் செய்ய வேண்டும்.. அதுக்கு முக்கியமான காரணம் இருக்கு – இர்பான் பதான் பாராட்டு

0
0

​நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டிவெண்டி-வெண்டி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் நமன் தீர் இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படுத்திய மனஉறுதி மற்றும் அதிரடியான பேட்டிங் குறித்து முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் பாராட்டிப் பேசியுள்ளார்.

​இந்திய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து அழுத்தத்தில் இருந்தபோது களமிறங்கிய நமன் தீர், எந்தவித பதற்றமும் இன்றி தனது இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

​இதுகுறித்து முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் பேசும்போது “நான் நமன் தீரின் ஹார்ட் ரேட்டை செக் செய்ய விரும்புகிறேன்! என்ன ஒரு பிளேயர் அவர். அவர் மிகவும் வெர்சடைல் ஆன வீரரும் கூட. நாங்கள் முன்பே அவரைப் பற்றிப் பேசியிருக்கிறோம், ஆனால் அவர் பிரஷருக்கு நடுவிலும் எந்தவித தயக்கமும் இன்றி எளிதாக புல் ஷாட் ஆடினார். அது அவருக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. புல் ஷாட் ஆடுவதற்காக அவரிடம் ஏராளமான நேரம் இருக்கிறது. மேலும் அதை அவர் அற்புதமாக எக்ஸிகியூட் செய்கிறார்”

“மீண்டும் ஒருமுறை அவர் அவுட்ஸ்டாண்டிங்காக செயல்பட்டுள்ளார். முதல் போட்டியிலும் கூட பிரஷரான சூழ்நிலையில் அவர் சூப்பரான இன்னிங்ஸ் ஆடினார், மேலும் இங்கும் அதே போன்றதொரு இம்ப்ரெசிவான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் பினாமினலாக உள்ளது, அவருடைய பேட்டிங் மிகவும் எக்ஸலண்டாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து இதுபற்றி இர்பான் பதான் பேசும்போது “நமன் தீர் பேட் செய்து கொண்டிருக்கும்போது அந்த மெடிக்கல் டெலிகோப் போன்ற ஒன்றை எடுத்து அவரது நெஞ்சில் வைத்து அவரது ஹார்ட் ரேட்டை செக் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் மிகவும் கூலாகவும் காளமாகவும் இருப்பதாக நான் உணர்கிறேன். அவரது ஹார்ட் பீட் மிகவும் கண்ட்ரோலாகவே இருக்க வேண்டும், அதனால்தான் பிரஷரான சூழ்நிலையில், குறிப்பாக அவர் இப்போதுதான் டீமுக்கு வந்திருக்கிறார் என்பதைக் கருத்தில் கொண்டால் கூட அவர் பிரஷரில் பேட் செய்கிறார் என்றே உங்களால் சொல்ல முடியாது” என்றும் கூறி இருக்கிறார்.

- Advertisement -