தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 99 ரன்னில் சுருட்டி மலையால் பாதிக்கப்பட்ட போட்டியை வெல்லும் அளவுக்கு சவுத் ஆப்பிரிக்கா அணி முன்னேறி இருக்கிறது.
இந்த போட்டியின் முதல் இரண்டு நாட்கள் மலையும் காரணமாக பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் தெம்பா பவ்மா 179 ரன்கள், யான்சன் 85 ரன்கள், சைமன் ஹார்மர் 82 ரன்கள் எடுக்க, அந்த அணி முதல் இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
இன்று நான்காவது நாளில் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 99 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. பேட்டிங்கில் கடைசி வரிசையில் கலக்கிய மார்க்கோ யான்சன் ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.
மேலும் தற்போது ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 79 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் மழையால் இரண்டு நாட்கள் பாதிக்கப்பட்ட போதும், சவுத் ஆப்பிரிக்க அணி சிறப்பாக மீண்டு வந்து போட்டியை வெல்லக்கூடிய வாய்ப்பை உருவாக்கி அசத்தியிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.






