நடராஜன் வருஷத்துல 40 நாள் ஆட கோடிக்கணக்குல பணம் எதுக்கு?.. ஆனா மதிப்பு இறங்கிட்டே போகுது – ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
0

​ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஹைதராபாத் அணிக்கு டிரேட் செய்யப்பட்டது குறித்தும், அவரது கிரிக்கெட் பங்களிப்பு குறித்தும் முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்து பேசி இருக்கிறார்.

​ஐபிஎல் தொடர்களில் ஒரு காலத்தில் டெத் ஓவர்ஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆக வலம் வந்த நடராஜன், கடந்த சில ஆண்டுகளாக உடற்தகுதி மற்றும் ஃபார்ம் இழந்து தடுமாறி வருவதால் இந்த விவாதம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது.

- Advertisement -

​ஹைதராபாத் அணிக்கு நடராஜன் மீண்டும் திரும்பியது குறித்து கிரிஸ் ஸ்ரீகாந்த் பேசும்போது “இது நடராஜனுக்கு மிகச் சிறந்த விஷயம்தான், ஏன்னா அவர் வருடத்திற்கு வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாடுகிறார். இதுக்கே அவருக்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்குது. அவர் ரஞ்சி ட்ராபி தொடரில் கூட விளையாடுவது கிடையாது, ஆனாலும் ஐபிஎல் தொடரில் அவருக்கு நல்ல தொகை கொடுக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடராஜனின் கிரிக்கெட் கிராப் மெல்ல மெல்ல கீழ்நோக்கி வந்து கொண்டிருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

​மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில் “பிரபுல் ஹிங்கே மற்றும் சாகிப் ஹுசைன் போன்ற பந்துவீச்சாளர்கள் ஏற்கனவே அணியில் இருக்கும்போது, ஹைதராபாத் அணி எதற்காக அவரை மீண்டும் அணியில் எடுத்தது என்று எனக்குத் தெரியவில்லை. நடராஜனின் பழைய விலை டெல்லி அணியால் 10.75 கோடி ரூபாயாக இருந்தது, ஆனால் இந்த டிரேட் மூலம் தற்போது அவரது விலை 5 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் பல ஐபிஎல் அனுபவங்களைக் கொண்டுள்ளார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -