ஷமி தேர்வு விஷயத்தில் ஒரு சதி இருக்கிறது.. நிச்சயமாக அந்த வெளிப்படைத் தன்மை தேவை – கைஃப் சந்தேகம்

0
0

​நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சேர்க்கப்படாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் பிசிசிஐயிடம் கேள்வி எழுப்பி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

​இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் ரஞ்சி தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் முகமது ஷமி தேர்வு செய்யப்படாதது கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் வல்லுநர்களிடையேயும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

​முகமது ஷமி தற்போது ரஞ்சி தொடரில் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். நியூசிலாந்து ஆடுகளங்களில் நல்ல அனுபவம் கொண்ட அவர் தேர்வு செய்யப்படாதது குறித்து கிரிக்கெட் வாரியம் வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களை அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

​இதுகுறித்து முகமது கைஃப் பேசும்போது “இதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். முன்னால் வந்து இதற்கான காரணம் என்னவென்று எங்களிடம் சொல்லுங்கள். அவர் எல்லாவற்றையும் சரியாகச் செய்து வருகிறார். ரஞ்சி போட்டிகளில் விளையாடுகிறார், விக்கெட்டுகளையும் எடுக்கிறார், பிறகென்ன காரணமாக இருக்க முடியும்? அவர் ஷார்ட் ஸ்பெல் மட்டுமே வீசுகிறார் என்பதால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று எங்கோ படித்தேன். ஜஸ்பிரித் பும்ராவும் கூட ஷார்ட் ஸ்பெல் தான் வீசுகிறார், அதற்குப் பிறகு அவருக்கு பிரேக் கொடுக்கப்படுகிறது. இங்கிலாந்தில் அவரது வொர்க்லோட் மேனேஜ் செய்யப்பட்டபோது, சுப்மன் கில் அவரை ஷார்ட் ஸ்பெல் மூலமாகத்தான் கையாண்டார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து ஷமி குறித்து பேசிய முகமது கைஃப் “அதனால் ஷமி ஷார்ட் ஸ்பெல் வீசினால் அதில் என்ன பிரச்சனை இருக்கிறது? ஷார்ட் ஸ்பெல் மூலமாகவும் அவரால் தனது வேலையைச் செய்ய முடியும். எனவே வெளிப்படைத்தன்மையில் எங்கோ ஒரு கிரே ஏரியா இருக்கிறது. அதனால் எதிர்காலத்தில், எப்போதாவது ஒருமுறை, ஒருவேளை ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்குப் பிறகு, அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை, உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய அனைத்தும் வெளிப்படையாகத் தெரியவரும் என்று நம்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -