கம்பீர் அடுத்த உலக கோப்பையை மறந்துடுங்க.. மொத்த பழியையும் நான் இவங்க மேல தான் போடுவேன் – கைப் கோபம்

0
0

​இந்திய அணி தொடர்ச்சியாகச் சந்தித்து வரும் தோல்விகள் மற்றும் அணியின் தற்போதைய பந்துவீச்சு பலகீனம் குறித்து முன்னாள் வீரர் முகமது கைப் வெளிப்படையாகத் தனது கடும் விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளார்.

​ஐந்து போட்டிகள் கொண்ட தொடர்களில் பேட்டர்கள் சில ஆட்டங்களை வெற்றிகரமாக வென்று தருவார்கள் என்றாலும், மீதமுள்ள போட்டிகளில் பந்துவீச்சாளர்கள்தான் வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -

​தற்போது இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பெற்றுத் தராத நிலையில், இந்த காம்பினேஷனுடன் உலகக் கோப்பையை வெல்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

​இந்தியா அணியின் தோல்வி குறித்து முகமது கைப் பேசும்போது “இங்கு உண்மை என்னவென்றால் இந்திய அணி தோற்பதற்கான காரணம் அவர்களின் பந்துவீச்சுதான். முழுப் பழியும் அவர்கள் மீதே விழ வேண்டும். 247 என்பது மிகக் அதிகமான ரன்கள் ஆகும். நாம் மோசமாகப் பந்துவீசியதால்தான் தோற்றோம். போர்டில் மிக அதிக ரன்கள் இருந்தன. மேலும் இது முதல் முறை நடப்பதும் கிடையாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து உலகக் கோப்பை வாய்ப்புகள் மற்றும் பந்துவீச்சு குறித்துப் பேசும்போது “ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் வழக்கமாக பேட்டர்கள் மூன்று ஆட்டங்களை வென்று தருவார்கள், பவுலர்கள் மற்ற ஆட்டங்களை வென்று தருவார்கள். இங்கு பவுலர்கள் எந்த ஆட்டத்திலுமே வெற்றியைத் தந்து தருவது இல்லை. இந்த காம்பினேஷனுடன் நீங்கள் எப்போதுமே உலகக் கோப்பையை வெல்ல முடியாது” என்று கூறி முடித்து இருக்கிறார்.

- Advertisement -