நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் நெருங்கி வரும் வேளையில், இந்திய கிரிக்கெட் அணியின் டிரான்சிஷன் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்காமல் பொறுத்திருந்து பார்க்க விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் பௌலிங் கோச் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.
இந்திய அணி மேனேஜ்மென்ட் மூத்த வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை கொண்டு அணிக்குள் மாற்றங்களை செய்து வருகிறது. இந்த சூழலில் நியூசிலாந்து அணிக்கு எதிரான வரவிருக்கும் தொடருக்கு முன்னதாக அணியின் இந்த டிரான்சிஷன் திட்டங்கள் குறித்து பல்வேறு கேள்விகளும் விவாதங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.
அணியின் இந்த புதிய மாற்றங்கள் குறித்து பரத் அருண் பேசும்போது “இதன் டிரான்சிஷன் எவ்வாறு நடக்கிறது என்பதை நான் பொறுத்திருந்து பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் இதை இப்போதே கணிப்பது மிகக் கடினம்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “அணி மேனேஜ்மென்ட் இந்த மாற்றங்களை எவ்வாறு கையாளப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதனால் இது குறித்து உடனடியாக கருத்து ஏதும் சொல்வதை விட பொறுத்திருந்து பார்க்கவே நான் விரும்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.






