தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா டெஸ்ட் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலியா 214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு மேத்யூ ரென்ஷா தனி ஒருவராக போராடி 190 ரன்கள் குவித்தார். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 390 ரன்கள் எடுத்தது. வியான் முல்டர் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஒரு பேட்ஸ்மேன் கூட அரை சதம் அடிக்கவில்லை. அந்த அணி 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கம்மின்ஸ் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 314 ரன்கள் சேர்த்தது. மீண்டும் மேத்யூ ரென்ஷா அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு 421 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 206 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜோஷ் ஹேசில்வுட் ஆறு விக்கெட் கைப்பற்றினார். மார்க்ரம் அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக பொறுப்பேற்று முதல் 11 போட்டிகளில் தோல்வி அடையாமல் இருந்து உலக சாதனை படைத்தார். இந்த நிலையில் இந்தச் சாதனைக்கு ஆஸ்திரேலியா அணி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.






