கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட முடியாததால் இந்த போட்டியில் அணிக்கு நல்ல முடிவை தர வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டதாக இந்திய பந்துவீச்சாளர் தெரிவித்து இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல நாட்களும் சுமாரான நாட்களும் வருவது இயல்பு தான் என்றும், மனதை ஒரே நிலையில் வைத்திருக்கும் வரை மீண்டும் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.
அணியில் மூத்த வீரர் அல்லது தலைவர் என்று யாருமில்லை என்றும், அனைவரும் ஒருவருக்கொருவர் வெற்றியை கொண்டாடும் நல்ல சூழல் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டி20 போட்டிகளில் பவர்ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடும்போது, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு பந்துவீசுவதை தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார். இறுக்கமான அட்டவணைக்கு ஏற்ப விரைவாக அடாப்ட் செய்து கொள்ளும் அணியே பெரும்பாலும் வெற்றி பெறுகிறது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
போட்டி சூழல் மற்றும் அணி குறித்து பேசும்போது “பந்து சிறிது ரிவர்ஸ் ஸ்விங் ஆனது சிறப்பாக இருந்தது, டெத் ஓவர்களில் ரிவர்ஸ் பந்துவீசுவது வேடிக்கையான அனுபவம். கடந்த போட்டியில் சோபிக்காததால் இந்த முறை அணிக்கு சரியான முடிவை தர விரும்பினேன். அணி சூழல் மிகவும் கூலாக உள்ளது, சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் இயல்பு தான், லெவல் ஹெடட்டாக இருக்கும் வரை சிறப்பாக மீண்டு வர முடியும்” என்று கூறி இருக்கிறார்.
டி20 கிரிக்கெட்டில் மன உறுதியை பேணுவது குறித்து பேசும்போது “ஆரம்ப ஓவர்களிலும் டெத் ஓவர்களிலும் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடும்போது அதை நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன். அது நல்ல சவால் மற்றும் வேடிக்கையானது. அந்த நேரத்தில் தான் நமது ஸ்கில்ஸ் மற்றும் மன வலிமையை சோதிக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் சூழ்நிலைகளுக்கு மாறுவது குறித்து பேசும்போது “புதிய பந்து மற்றும் பழைய பந்தில் பந்துவீசி ஸ்கில்ஸ் ஷார்பன் செய்வதே முக்கிய போக்கஸ் ஆகும். பிஸியான ஷெட்யூல் இருக்கும்போது விரைவாக அடாப்ட் செய்யும் அணியே வெற்றி பெறும். நாங்களும் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட முயல்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.






