ஷமிக்கு நிச்சயமா இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்.. அதுக்கு பின்னணியில் இந்த முக்கிய காரணம் இருக்கு – சுரேஷ் ரெய்னா நம்பிக்கை

0
1

​இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் நெருங்கி வரும் நிலையில், அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்திய தேசிய அணிக்கு மிக விரைவில் திரும்புவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வலுவாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

​இந்திய அணியில் பல முக்கிய பந்துவீச்சாளர்கள் காயத்தால் அவதிப்பட்டு வரும் சூழலில், தேர்வு குழுவினரின் ஆப்ஷன்களில் முகமது ஷமியின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவது கிரிக்கெட் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

​மற்றொரு மூத்த வீரரான புவனேஷ்வர் குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளதைப் போலவே, முகமது ஷமிக்கும் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்று சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதலில் தனது வாய்ப்பு பற்றி பேசி இருந்த முகமது ஷமி “புவனேஷ்வர் குமார் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார், அது அவருக்கு நல்லது. ஆனால் அவரது தேர்வு என்னை கவலைப்படவில்லை. எனக்கு எங்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தாலும் அங்கே எனது பெஸ்ட்டை கொடுப்பேன். இப்போது எனது முழு கவனமும் ரஞ்சி டிராபி மேட்ச் மீதுதான் உள்ளது. கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக எனக்கு இதே நிலைதான் தொடர்கிறது. பெங்கால் அணிக்காக நான் தொடர்ந்து பெர்ஃபார்மன்ஸ் செய்து எனது ஃபிட்னெஸை நிரூபித்துள்ளேன். ஒருவேளை எனக்கு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு இனி கிடைக்கவில்லை என்றால், அது எனது இழப்பு அல்ல” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​இதுகுறித்து பேசிய சுரேஷ் ரெய்னா கூறும்போது “ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களைக் கருத்தில் கொண்டு அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு லைன்-அப்பில் பல மாற்றங்கள் செய்யப்படலாம். அனுபவம் வாய்ந்த பவுலர்களின் வருகை டீம் காம்பினேஷனை மேலும் வலுப்படுத்தும் என்பதால், தேர்வுக்குழுவினர் இதுபற்றி தீவிரமாக யோசித்து வருகின்றனர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -