எப்போதும் சச்சின்தான்.. என்னால் சுயநலமாக பேச முடியாது.. அவர் ஏற்படுத்தியது புரட்சி – விராட் கோலி உருக்கம்

0
51

​சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தனது 55வது செஞ்சுரியை விளாசிய இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டி சாதனை படைத்திருந்தாலும், தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை அவர் விரும்புவதில்லை.

​கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களுடன் தனது ஆட்டத்தை ஒப்பிட்டு பேசுவது குறித்து இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தனது கருத்துக்களைத் தெளிவுபடுத்தியுள்ளார். களத்தில் பல சாதனைகளை முறியடித்து வந்தபோதிலும், தனக்கு முன்னோடியாக திகழ்ந்த வீரர்களின் பங்களிப்பே மிகவும் மேலானது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -

​இதுகுறித்து விராட் கோலி பேசும்போது “எனக்கு எப்போதுமே சச்சின் பாஜி சச்சின் பாஜியாகவே இருப்பார். எம்எஸ் தோனி எப்போதுமே எனது முதல் கேப்டனாகவே இருப்பார். இந்த விஷயங்கள் எனக்குள் ஒருபோதும் மாறாது. நான் என்னை சாதனை படைத்த ஒருவனாகப் பார்த்ததே இல்லை. ‘நான் செய்து முடித்துவிட்டேன்’ என்று சொல்லும் நிலைக்கு நீங்கள் எப்போதுமே வர முடியாது. நீங்கள் மனநிறைவுடன் இருக்கலாம், ஆனால் பணிவோடு இருந்து சரியான விஷயங்களைச் செய்தால், சுயநலத்துடன் ‘நான் மற்றவர்களை விட சிறந்தவன்’ என்று சொல்ல முடியாது” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து அவர் பேசும்போது “ஏனெனில் அதுதான் முடிவின் தொடக்கம். சச்சின் அவரது காலத்தில் இந்த விளையாட்டில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தினார். அது எண்களுக்கும் ஒப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டது. அவர் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் ஒருபோதும் மறக்க முடியாதது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் அவர் பேசும்போது “ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பை நான் மதிக்கிறேன். ஆனால் தூரத்திலிருந்து என்னை பார்ப்பவர்கள் உருவாக்கும் நபராக நான் என்னை பார்ப்பதில்லை. நான் எங்கிருந்து வந்தேன் என்பதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் எப்போதுமே மாறாமல் அப்படியேதான் இருப்பீர்கள். மற்றவர்கள் என்னைப் பார்க்கும் அதே கண்ணோட்டத்தில் நான் என்னைப் பார்ப்பதில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -