வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படாதது குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்திய அணி மேனேஜ்மென்ட் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் ரிஷப் பண்ட்டின் சமீபத்திய லிமிடெட் ஓவர்ஸ் கிரிக்கெட் பெர்ஃபார்மன்ஸ் குறித்து விரிவாக ஆலோசித்து இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து தேர்வுக்குழு தரப்பில் பேசும்போது “ஒயிட் பால் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் தனக்கு இருக்கும் பிரம்மாண்டமான டேலண்டிற்கு ஏற்றவாறு இன்னும் முழுமையான ஜஸ்டிஸ் செய்யவில்லை. எனவே தான் அவருக்குப் பதிலாக துருவ் ஜூரெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்” என்று கூறி இருக்கிறார்கள்.
மேலும் அவர்கள் பேசும்போது “தற்போது நடைபெறவுள்ள இரானி கப் தொடரில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார். ரெட் பால் கிரிக்கெட்டில் அவர் தனது ஃபார்மை நிரூபிக்க இது ஒரு நல்ல ஆப்பர்சூனிட்டி” என்று கூறி இருக்கிறார்கள்.
வரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரைக் கருத்தில் கொண்டு இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதனால் ரிஷப் பண்ட் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்ப உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.






