ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 22 பந்துகளில் 57 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்த சஞ்சு சாம்சன், போட்டிக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் தனது மனநிலை மற்றும் அணித் தேர்வு குறித்துப் பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கு இருக்கும் கடும் போட்டி மற்றும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், வெளிப்புறத்திலிருந்து வரும் தேவையற்ற விமர்சனங்களையும் அழுத்தங்களையும் எவ்வாறு கடந்து வருகிறார் என்பதைப் பற்றி விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.
அணியில் துவக்க வீரர் இடத்திற்காக அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோருடன் இருக்கும் போட்டி குறித்து சஞ்சு சாம்சன் பேசும்போது “கேப்டன், கோச் மற்றும் செலக்டர்ஸ் ஆகிய அனைவருக்கும் இது மிகவும் சவாலான சூழல் ஆகும். அனைவரும் நன்றாக பெர்ஃபார்ம் செய்து வரும் நிலையில் சரியான ஆப்பர்ச்சூனிட்டி கொடுப்பது கடினமான விஷயம். ஐபிஎல் ஃபிரான்சைஸ் டீமை லீட் செய்த அனுபவத்தில் இருந்து இந்த பிரஷர் நிலையை என்னால் எளிதாக பேலன்ஸ் செய்ய முடிகிறது” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து கௌதம் கம்பீர் பற்றி சஞ்சு சாம்சன் பேசும்போது “இந்திய டீமை ரன் செய்வது எளிதான காரியம் அல்ல. வைபவ் சூர்யவன்ஷி போன்ற யங் பிளேயர்ஸ் ஃபார்மில் இருக்கும்போது டீம் மேனேஜ்மென்ட் சில ஹார்ட் டிசிஷன்ஸ் எடுக்க வேண்டியிருக்கும். ஜிஜி பாய் (கௌதம் கம்பீர்) இதுகுறித்துப் பேசி எனக்கு சரியான கம்யூனிகேஷன் கொடுத்தார். பிராப்ளர் டிசிஷன்ஸ் எடுப்பதை விட டீம் முக்கியம் என்று ஹார்ட் டிசிஷன்ஸ் எடுக்கும் மேனேஜ்மென்ட்டிற்கு நாம் கிரெடிட் கொடுத்தே ஆக வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
வெளியில் இருந்து வரும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர் “நான் சோஷியல் மீடியாவில் வரும் கமெண்ட்ஸ்களை தவிர்க்க வைஃபை ஆஃப் செய்து விடுவேன். சில நேரங்களில் விமர்சனங்கள் மைண்டைப் பாதித்தாலும், நான் யார் என்பதை நினைவூட்டி பாசிட்டிவ் மைண்ட்செட் உடன் பிளேயிங் லெவன் உள்ளே செல்வேன்” என்று கூறி இருக்கிறார்.






