சச்சின் கங்குலி டிராவிட்டை பிசிசிஐ மதிக்கணும்.. உடனே இந்த ஆர்டரை கொண்டு வரணும் – கவாஸ்கர் வேண்டுகோள்

0
0

​இந்திய கிரிக்கெட்டை மேலும் பலப்படுத்த சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி போன்ற முன்னாள் வீரர்களின் அனுபவத்தைப் பயன்படுத்த பிசிசிஐ முன்வர வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

​பிசிசிஐ அமைப்பில் தற்போது தேர்வுக்குழு மற்றும் கிரிக்கெட் அட்வைசரி கமிட்டி மட்டுமே செயல்பட்டு வருகின்றன. எனவே இந்த கமிட்டியின் அதிகாரத்தை அதிகரித்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளின் அட்டவணைகளை சீரமைக்க இவர்களைப் பயன்படுத்தலாம்.

- Advertisement -

​சமீபத்தில் முடிவடைந்த துலீப் டிராபி தொடரில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் மட்டுமே ஒரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த முறையை மாற்றி, இந்திய கிரிக்கெட்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

​இதற்காக அமைப்பை மறுசீரமைப்பது குறித்து சுனில் கவாஸ்கர் பேசும்போது “சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, அணில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், வீரேந்தர் சேவாக் போன்ற மிகப்பெரிய லெஜெண்ட்ஸ் இந்த கமிட்டியில் இடம்பெற வேண்டும். இவர்கள் இந்திய அணியின் ஹெட் கோச் மற்றும் கேப்டனுடன் இணைந்து செயல்படும் போது அதற்கு தனி பவர் கிடைக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​”இதேபோல பெண்கள் கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த முன்னாள் வீராங்கனைகளைக் கொண்டு தனியாக ஒரு கமிட்டியை உருவாக்க வேண்டும். இதைப் பற்றி நினைக்கும் போதே சிலிர்ப்பாக இருக்கிறது, இது நடக்குமா அல்லது வெறும் ட்ரீம் தானா?” என்று கூறி முடித்துள்ளார்.

- Advertisement -