எத்தனை மேட்ச் ஜெயிச்சாலும் அவர் இல்லன்னா இந்தியாவுக்கு பெரிய சிக்கல்.. வாசிம் ஜாபர் விளக்கம்

0
1

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அணியில் இருக்கும் ஒரு முக்கியமான குறையை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக ஹார்திக் பாண்டியா இல்லாத நேரத்தில் இந்திய அணியின் 5-வது பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி 2 ஓவர்களில் 30 ரன்களையும், சிவம் துபே 2 ஓவர்களில் 21 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். அபிஷேக் சர்மாவும் பந்துவீச பயன்படுத்தப்பட்டார். இதில் அபிஷேக் ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும், நிதிஷ் மற்றும் துபே அதிக ரன்களை கொடுத்தது இந்திய அணியின் பந்துவீச்சு சமநிலை குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து வாசிம் ஜாஃபர் கூறுகையில், “5-வது பந்துவீச்சாளர் இடம்தான் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. நிதிஷ் ரெட்டி மற்றும் சிவம் துபே அதிக ரன்களை கொடுத்தனர். ஹார்திக் பாண்டியா இல்லாதபோது இது பிரச்சினையாக இருக்கும். உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு 5-வது அல்லது 6-வது பந்துவீச்சாளர்கள் மீது இந்தியா கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -