இரண்டு தொடர் போதுமா..? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அபிஷேக் சர்மா.. சரியான பதிலடி

0
1

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 32 பந்துகளில் 82 ரன்கள் விளாசி முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் இந்திய அணி 157 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டியது.

சமீபத்திய சில தொடர்களில் இந்திய அணியின் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை என்ற விமர்சனங்கள் இருந்தன. ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டம் அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்தது.

- Advertisement -

“ஒன்று அல்லது இரண்டு மோசமான தொடர்கள் எங்களுடைய பேட்டிங் திறனை தீர்மானிக்காது. எங்களிடம் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் மீண்டும் எங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்று அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.

- Advertisement -