ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான மல்டி டே தொடருக்கான இந்தியா ஏ அணி தேர்வில் டெஸ்ட் தொடர் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய தேர்வாளர்களின் முழு போக்கஸும் ஒன்டே தொடரின் மீது மட்டுமே இருந்ததாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் இதில் சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் டெஸ்ட் ஸ்குவாடில் சேர்க்கப்பட்டிருந்தாலும், மற்ற பிளேயர்கள் தேர்வு குறித்து கேள்விகள் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. குறுகிய தொடராக இருந்தாலும் இதில் பல இளம் இந்திய பிளேயர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “இந்தியா ஏ அணியில் ஒன்டே பார்மட்டிற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது போல தெரிகிறது. டெஸ்ட் தொடரை தேர்வாளர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. ஆனால் நமது நம்பர் 3 பேட்டர்களான தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் கேப்டன் மற்றும் வைஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து அவர் பேசும்போது “இருவரும் ஒருவருக்கொருவர் காம்படீஷன் கொடுக்கக்கூடும். தேவ்தத் படிக்கல் கேப்டனாக இருப்பதால் அவர் நம்பர் 3 ஸ்பாட்டில் பேட்டிங் செய்வார், இதனால் சாய் சுதர்சன் ஆர்டரில் மேல் அல்லது கீழ் இறங்க வேண்டியிருக்கும். மேலும் பவுலிங் லைன் அப்பில் மும்பை டீம் பிளேயர்களான சம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோருக்கு நல்ல ரெப்ரசன்டேஷன் கிடைத்துள்ளது” என்று கூறி இருக்கிறார்.






