எனக்கு மோர்னே மோர்கள் கொடுத்த பிளான் இதுதான்.. நான் அதை மட்டும் தான் செஞ்சுகிட்டு இருக்கேன் – சிவம் துபே பேட்டி

0
1

​இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் சிவம துபே, டி20 போட்டிகளில் கடினமான ஓவர்களில் பந்துவீசுவது மற்றும் அணியின் திட்டம் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

​ஏசியன் கேம்ஸ் தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாட உள்ளது. இதில் ஆல் ரவுண்டராக பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்க சிவம துபே தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.

- Advertisement -

​இந்திய பௌலிங் கோச் மோர்னே மோர்கல் வழிகாட்டுதலில் தனது திறமையை அவர் மேம்டுத்தி வருகிறார். ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியில் விளையாடுவது தனக்கு மிகவும் சௌகரியமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

​டி20 கிரிக்கெட்டில் தனது பந்துவீச்சு திட்டம் குறித்து சிவம துபே பேசும்போது “கடினமான ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட் வீழ்த்துவதே எனது இலக்கு. பேட்டர்களை விட நான் மிகவும் ஸ்மார்ட்டாக யோசிக்க வேண்டும் என்று பௌலிங் கோச் மோர்னே மோர்கல் எனக்கு அறிவுறுத்தி இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பேசும்போது “சிஎஸ்கே பிராஞ்சைஸ் வீரர்களுக்கு முழு ஃப்ரீடம் கொடுக்கிறது. போட்டியில் நாம் தோற்றாலும் கூட நமது முழு உழைப்பை கொடுத்தால் போதும் என்று நிர்வாகம் ஆதரவு அளிக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -