பும்ரா திரும்பி வந்து இதை செஞ்சா மட்டுமே நியாயமா இருக்கும்.. வெயிட் பண்ணுவோம் வேற வழி இல்ல – அபிநவ் முகுந்த் கருத்து

0
0

​ஸ்ரீலங்கா தொடருக்கு பிறகு நடந்த பிசிசிஐ மீட்டிங் குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

​இந்திய டீம் சமீபத்தில் பல மேட்ச்களில் தொடர்ந்து விளையாடியதால் பிளேயர்களுக்கு இன்ஜுரி பிரச்சனை அதிகமாகி உள்ளது. இதை சரி செய்ய இந்தியா ஏ டீம் மேட்ச்கள் மற்றும் சீரிஸ்களுக்கு நடுவே போதிய ரெஸ்ட் தேவை என்று பிசிசிஐ மீட்டிங்கில் பேசப்பட்டுள்ளது.

- Advertisement -

​அடுத்து வரவிருக்கும் நியூசிலாந்து டெஸ்ட் சீரிஸுக்கு முன்னதாக நடக்கும் இந்தியா ஏ மேட்ச்களில் பும்ரா விளையாட வாய்ப்பு உள்ளது. இதனால் அவர் ஓடிஐ டீமில் இடம்பெறுவாரா அல்லது நேரடியாக டெஸ்ட் சீரிஸுக்கு தயாராவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

​இதுகுறித்து அபினவ் முகுந்த் பேசும்போது “பும்ராவை நான்கு நாள் மேட்ச்கள் அல்லது நியூசிலாந்துக்கு எதிரான ஏ மேட்ச்சில் விளையாட சொல்லலாம். ஆனால் அவர் ஓடிஐ ஸ்குவாடில் இடம் பிடிப்பாரா அல்லது நேரடியாக நியூசிலாந்து டெஸ்ட் மேட்ச்க்கு தயாராவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், அதனால் செலெக்டர்களுக்கு இது சவாலான நேரமாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து ரோஹித் சர்மா ஃபியூச்சர் குறித்து பேசும்போது “தேவாஜித் சாய்கியாவின் ஸ்டேட்மென்ட் ரோஹித் சர்மா 2027 வேர்ல்ட் கப் விளையாடுவாரா என்ற ரூமர்ஸ்களுக்கு எண்ட் கார்டு போட்டுள்ளது, இனி முடிவெடுக்க வேண்டியது ரோஹித் சர்மாவின் கையில்தான் உள்ளது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -