கம்பீர் கூட்டணி பெரிய தப்பு பண்ணிட்டாங்க.. ஆஸியும் இங்க வந்து நம்மள அடிக்கும் – ஸ்ரீகாந்த் எச்சரிக்கை

0
1

ஶ்ரீலங்கா மற்றும் இந்தியா இடையேயான 2வது டெஸ்ட் மேட்ச் டிராவில் முடிந்ததை தொடர்ந்து, வேர்ல்டு டெஸ்ட் சேம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பு குறித்து முன்னாள் இந்திய கேப்டன் கிரிஸ் ஸ்ரீகாந்த் எச்சரித்துள்ளார்.

​சுப்மன் கில் தலைமையிலான இந்திய டீம் கொழும்பில் நடந்த போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால், கடைசி நாளில் ஸ்ரீலங்காவின் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் சோனல் தினுஷா அபாரமாக விளையாடி மேட்சை டிராவில் முடித்தார்.

- Advertisement -

​இந்த சமநிலையின் காரணமாக, வேர்ல்டு டெஸ்ட் சேம்பியன்ஷிப் பாயிண்ட்ஸ் டேபிளில் இந்தியா 5வது இடத்தில் நீடிக்கிறது. அடுத்து நியூசிலாந்துடன் 2 மேட்ச்கள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹோம் கிரவுண்டில் 5 மேட்ச்கள் விளையாட வேண்டி இருக்கிறது.

​இதுகுறித்து முன்னாள் கேப்டன் கிரிஸ் ஸ்ரீகாந்த் பேசும்போது “இந்த டிரா காரணமாக வேர்ல்டு டெஸ்ட் சேம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா குவாலிஃபை ஆவது கஷ்டம். மீதமுள்ள போட்டிகளில் ஜெயித்தால் கூட மற்ற டீம்களின் ரிசல்ட்டை நம்பி இருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவை 5-0 என வீழ்த்துவது சந்தேகம் தான். ரேங்க் டர்னர் பிட்ச் அமைத்தால் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தவும் வாய்ப்புள்ளது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இந்தியா பெரிய தப்பு பண்ணிட்டாங்க. சோனல் தினுஷா தொடர் முழுவதும் சிறப்பாக ஆடினார். இந்த இடத்தில் தான் பும்ரா போன்ற ஃபினிஷிங் பவுலரின் மிஸ்ஸிங் தெரிகிறது. மழை உதவி செய்திருந்தாலும் இந்தியா இந்த போட்டியை ஈஸியாக ஜெயித்திருக்க வேண்டும்” என்று கூறி முடித்தார்.

- Advertisement -