கேப்டனா கில் சொந்த பவுலர்கள் கிட்டயே பாகுபாடு காட்டுறாரு.. இதுதான் பெரிய பிரச்சனை – ஜடேஜா விமர்சனம்

0
0

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு சுப்மன் கில்லின் கேப்டன்சி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்த கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

​இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தும், கடைசி நாளில் இலங்கை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்தனர்.

- Advertisement -

​இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை கில் பயன்படுத்திய விதம் குறித்து பேசிய அஜய் ஜடேஜா, கில்லுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மீது ஒரு தனிப் பிரியம் மற்றும் சார்புத்தன்மை இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

​அஜய் ஜடேஜா இதுகுறித்து பேசும்போது “ஒவ்வொரு கேப்டனும் கிரிக்கெட்டை எப்படி பார்க்கிறாரோ அப்படித்தான் அணியை வழிநடத்துவார். கில்லின் கேப்டன்சியில் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. அவர் தனது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தீப் ஸ்கொயர் லெக் பீல்டர் வைத்து ஷார்ட் பிட்ச் பந்துகளை வீச வைப்பதை விரும்புகிறார். மற்ற கேப்டன்களிடம் இதை நாம் அதிகமாக பார்க்க முடியாது. இது அவர் வேகப்பந்து வீச்சாளர்கள் மீது வைத்துள்ள ஒரு சார்புத்தன்மை ஆகும்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

​மேலும் சுப்மன் கில்லின் சுழற்பந்து வீச்சாளர்களின் பயன்பாடு குறித்து தொடர்ந்து பேசும்போது “ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களை கையாள்வதில் அவர் வேறு மாதிரி செயல்படுகிறார். ஒருவேளை அவர் சுழற்பந்து வீச்சை மிக சுலபமாக எதிர்கொண்டு பேட்டிங் செய்வதால், சுழற்பந்து வீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியாது என்று நினைக்கிறாரோ என்னவோ. அதனால் எந்த சூழ்நிலையிலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு டிஃபென்சிவ் பீல்டிங் அமைப்பதையே அவர் வழக்கமாக கொண்டுள்ளார். இது அவருடைய ஸ்டைல், போகப்போக அவர் கேப்டனாக மேலும் வளர்ச்சி அடைவார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -