கம்பீர் மிக்சர் சாப்பிடுறீங்களா.. 6, 7 கோச் இருந்தும் ஒரு சின்ன பையனை தடுக்க முடியல – முகமது கைஃப் கோபம்

0
0

கொழும்புவில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை பேட்ஸ்மேன் சோனல் தினுஷாவின் ஆட்டத்தை வீழ்த்த இந்திய அணி தவறியதன் பின்னணியில் உள்ள வியூகக் குறைபாடுகளை முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

​இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி ஃபாலோ ஆன் பெற்ற போதிலும், சோனல் தினுஷா சதமடித்து போட்டியை டிரா செய்ய வைத்தார்.
​இந்திய அணியிடம் வீடியோ அனலிஸ்ட் மற்றும் ஆறேழு கோச்கள் இருந்தும் தினுஷாவின் பலவீனத்தை கண்டுபிடிக்கத் தவறியது ஒரு கிளப் மேட்ச் போல செயல்பட்டதற்கு சமம் என்று முகமது கைஃப் சாடியுள்ளார்.

- Advertisement -

​அணி நிர்வாகத்தின் இந்த செயல்பாடு குறித்து முகமது கைஃப் பேசும்போது “ஒவ்வொரு பேட்டருக்கும் ஏதேனும் ஒரு பலவீனம் இருக்கும். அதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். நான் கில் பற்றி மட்டும் பேசவில்லை, பவுலிங் யூனிட் மற்றும் கோச்சிங் ஸ்டாஃப் அனைவரையும் சேர்த்துதான் சொல்கிறேன். முதல் போட்டியில் அவர் சதமடித்த போதே, அடுத்த போட்டியில் அவரை எப்படி ட்ராப் செய்வது என்று அனைவரும் ஒன்று கூடி விவாதித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் குறைவாகவே அட்டாக் செய்தனர். நேற்றைய ஆட்டத்தில் பீல்டிங் ஓபன் செய்யப்பட்டு, டிரைவ் பந்துகளே வீசப்படவில்லை” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து இந்திய அணியின் தந்திரோபாய தவறுகளை சுட்டிக்காட்டி முகமது கைஃப் பேசும்போது “முதல் போட்டியில் அவர் பற்றி தெரியாமல் இருந்தது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அதே தவறு நீடித்ததுதான் தவறு. இந்த போட்டியில் அவரால் அடிக்கப்பட்ட ஒரு கவர் டிரைவ் பவுண்டரியைக் கூட நீங்கள் பார்க்க முடியாது. அவர் புல், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்றாரே தவிர கவர் டிரைவ் ஆடவில்லை. அவரைப் போன்ற ஒரு பேட்டருக்கு ஃபுல் லென்த் பந்துகளை வீசி அட்டாக் செய்திருக்க வேண்டும். ஆனால், ஆறு ஏழு கோச்கள் மற்றும் வீடியோ அனலிஸ்ட் இருந்தும் இந்திய அணி இதை செய்யத் தவறிவிட்டது” என்று கூறி முடிக்கிறார்.

- Advertisement -
- Advertisement -