பிசிசிஐ சூரியவன்சிக்கு உடனே இதை செஞ்சா.. டெஸ்ட்ல பட்டைய கிளப்பலாம் – ஸ்டீவ் வாக் யோசனை

0
0

இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்டர் வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் திறன் கொண்டவர் என்றும், அவர் இந்திய அணிக்காக விளையாடுவது குறித்து ஆஸ்திரேலிய உலகக் கோப்பை வென்ற முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் பேசியிருக்கிறார்.

​இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் நடைபெற்று வரும் நிலையில், 15 வயதே ஆன இளம் பேட்டர் வைபவ் சூர்யவன்ஷி வைட் பால் ஃபார்மட்டில் காட்டிய அதிரடி ஆட்டத்தால் இந்திய டி20 அணியில் இடம் பிடித்து பல சாதனைகளை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

- Advertisement -

​இளம் வயதிலேயே இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ள இவர், ரெட் பால் கிரிக்கெட்டிலும் தனது ஆதிக்கத்தை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இவரை டெஸ்ட் போட்டிகளில் அறிமுகப்படுத்துவது குறித்த விவாதங்கள் தற்போது கிரிக்கெட் உலகில் தீவிரமடைந்து வருகின்றன.

​இந்த நிலையில் ஸ்டீவ் வாக் ஸ்டார் பேசும்போது “அவர் நிச்சயமாக ஒரு அசாத்தியமான திறமைசாலி, மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அளவுக்கு அவருக்கு சிறந்த திறன் உள்ளது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இவ்வளவு விரைவாக அவருக்கு இந்தியா வாய்ப்பளிக்கத் தயாராக இருக்கிறதா என்பதுதான் கேள்வி. அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடிக்க மாட்டார் என்று சொல்வதற்கில்லை, அவரிடம் அந்த மாதிரியான திறமை உள்ளது, ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் முற்றிலும் வித்தியாசமானது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து வைபவ் சூர்யவன்சியின் அனுபவம் குறித்து ஸ்டீவ் வாக் பேசும்போது “டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கும். அங்கு பவுலர்களுக்கு வித்தியாசமான விஷயங்களை செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே அவர் இன்னும் அதிக ஃபர்ஸ்ட் கிளாஸ் அனுபவத்தைப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நிறைய மூன்று அல்லது நான்கு நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாமல் அவரை நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தூக்கி வீசக்கூடாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -