ஜெய்ஸ்வால் சூரியவன்சியை விடக்கூடாது.. விளையாட தடை போடுங்க.. பொறுத்துக்க முடியாது – மஞ்ச்ரேக்கர் கருத்து

0
1

இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மைதானத்தில் நடந்த மோதல்களுக்காக ஐசிசி மற்றும் பிசிசிஐ மூலம் குறைந்த அபராதத்துடன் தப்பித்து வருவது குறித்தும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.

​கிரிக்கெட் போட்டிகளின் போது மைதானத்தில் வீரர்கள் தங்களது கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் எல்லை மீறி வெளிப்படுத்தும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இளம் வீரர்கள் தங்களின் ஒழுங்கீனமான நடத்தைகளால் மைதானத்தில் எதிரணி வீரர்களுடன் வாக்குவாதத்திலும் உடல்ரீதியான மோதல்களிலும் ஈடுபடுவது விளையாட்டு உலகிற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

​சமீபத்தில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி எதிரணி வீரரை தள்ளிய சம்பவமும், அதைத்தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அசிதா பெர்னாண்டோவை யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஹெல்மெட்டினால் முட்டிய சம்பவமும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த இரு சம்பவங்களுக்கும் ஐசிசி மற்றும் பிசிசிஐ வெறும் போட்டி கட்டணத்தில் சிறு தொகையை அபராதமாக விதித்து, டிமெரிட் புள்ளிகளுடன் வீரர்களை லேசான தண்டனையோடு தப்பவிட்டுள்ளது.

​இத்தகைய குறைந்தபட்ச அபராதங்கள் இளம் வீரர்களின் தவறான நடத்தையை திருத்த போதாது என்றும், இது விளையாட்டின் கண்ணியத்தையும் அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மைதானத்தில் இது போன்ற உடல்ரீதியான மோதல்களை தடுக்க கடுமையான விதிமுறைகளும் தடைகளும் விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

- Advertisement -

​இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிடும்போது “அன்புள்ள ஐசிசி மற்றும் பிசிசிஐ, சமீபத்தில் இந்தியா ஏ அணிக்காக வைபவ், இப்போது ஜெய்ஸ்வால்… இது போன்ற நடத்தைகளில் இருந்து அவர்கள் தப்பித்து செல்ல நீங்கள் தொடர்ந்து அனுமதித்தால், அதே நடத்தையை மீண்டும் மீண்டும் செய்யவே அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறீர்கள். இது விளையாட்டுக்கு நல்லது அல்ல, மிக முக்கியமாக அவர்களின் சொந்த எதிர்காலத்திற்கும் நல்லது அல்ல” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -