புது அவதாரம் எடுத்த சூரியவன்சி மாஸ் சம்பவம்.. அடுத்த ஜடேஜா வந்துட்டார் – ரசிகர்கள் மகிழ்ச்சி

0
3

தற்போது நடைபெற்று வரும் ​துலீப் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஈஸ்ட் ஜோன் மற்றும் நார்த் ஈஸ்ட் ஜோன் அணிகளுக்கு இடையேயான குவாட்டர் ஃபைனல் மேட்ச் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த மேட்ச்சில் ஈஸ்ட் ஜோன் டீம் தனது ஃபர்ஸ்ட் இன்னிங்ஸில் 467 ரன்கள் குவித்து அசாத்தியமான லீட் பெற்றது. தொடர்ந்து விளையாடிய நார்த் ஈஸ்ட் ஜோன் ஃபர்ஸ்ட் இன்னிங்ஸில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால், ஈஸ்ட் ஜோன் டீம் ஃபாலோ ஆன் கொடுத்தது.

​இரண்டாவது இன்னிங்ஸிலும் நார்த் ஈஸ்ட் ஜோன் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தனர். டி20 ஃபார்மட்டில் தனது அதிரடி பேட்டிங் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த வைபவ் சூரியவன்சி, இந்த மேட்ச்சில் ஈஸ்ட் ஜோன் டீமின் வைஸ் கேப்டனாக களமிறங்கினார். பேட்டிங்கில் 8 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தாலும், மேட்ச்சின் மூன்றாம் நாளில் தனது ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

​28-வது ஓவரை வீச வந்த லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர் வைபவ் சூரியவன்சி, ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மேட்ச்சின் போக்கை மாற்றினார். அந்த ஓவரின் இரண்டாவது பாலிலேயே கிஷன் லிங்டோ விக்கெட்டை வீழ்த்திய அவர், ஐந்தாவது பாலில் இம்லிவாதி லேம்தூர் விக்கெட்டையும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் உதவியுடன் வீழ்த்தினார். வெறும் 3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

​வைபவ் சூரியவன்சியின் இந்த அபாரமான ஆல்ரவுண்டர் பெர்ஃபார்மன்ஸை பார்த்து சோஷியல் மீடியாவில் ஃபேன்ஸ் அனைவரும் அவரை ரவீந்திர ஜடேஜாவுடன் ஒப்பிடத் தொடங்கினர். அவரது ஐபிஎல் டீமான ராஜஸ்தான் ராயல்ஸ் ஃபிரான்சைஸி தனது சோஷியல் மீடியா பேஜில் வைபவின் பந்துவீச்சு திறமையை வெகுவாகப் பாராட்டி ஒரு போஸ்ட் பகிர்ந்திருந்தது.

- Advertisement -

​வைபவ் சூரியவன்சியின் இந்த மாஸான ஸ்பெல் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் ஃபிரான்சைஸி தங்களது அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியா தளத்தில் கருத்து தெரிவிக்கும் போது “இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என்று நாங்கள் சொல்ல வரவில்லை, ஆனால் இதற்கான அறிகுறிகள் முன்பே தெளிவாகத் தெரிந்தன” என்று கூறி இருக்கிறது.

- Advertisement -