டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. குறிப்பாக, முக்கியமான போட்டிகளில் அவரது அதிரடி பேட்டிங் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ளது.
இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பந்த், தனது பேட்டிங்கால் பலமுறை ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளார்.
அவரது ஆட்டம் கடந்த காலத்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் வீரர் தொட்டா கணேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை இந்தியாவிற்கு கிடைத்த சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ரிஷப் பந்த் சிறந்த வீரர் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஒரு மேதை என்றும் பெருமையாக பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது
“இந்தியாவுக்கு இதுவரை கிடைத்த சிறந்த டெஸ்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்தான். அவரை விட அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை பெற்றுத் தந்த விக்கெட் கீப்பர் யாரும் இல்லை. அவரது தாக்கம் ஈடு இணையற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்த் ஒரு மேதை” என்று தொட்டா கணேஷ் பதிவிட்டுள்ளார்.






