ODI, டி20 உலகக் கோப்பையில் பெரிய மாற்றம்… ஐசிசியின் புதிய விதிகளால் இனி சாம்பியன் ஆவது கடினம்

0
1

சர்வதேச கிரிக்கெட்டின் மிகப்பெரிய தொடர்களான ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைகளில் முக்கியமான மாற்றங்களை ஐசிசி (ICC) அறிவித்துள்ளது. போட்டிகள் கடைசி வரை விறுவிறுப்பாக இருக்கவும், ஒவ்வொரு ஆட்டத்திற்கும் அதிக முக்கியத்துவம் கிடைக்கவும் இந்த புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் லீக் சுற்றில் அர்த்தமில்லாத போட்டிகள் குறையும் என ஐசிசி நம்புகிறது.

2027 ஒருநாள் உலகக் கோப்பையில் 14 அணிகள் பங்கேற்கும். இதில் லீக் சுற்று முடிந்ததும் 12, 13, 14-வது இடங்களில் இருக்கும் மூன்று அணிகள் முதலில் தனியாக ஒரு தகுதிச்சுற்றில் விளையாடும். அந்த மூன்று அணிகளில் வெற்றி பெறும் ஒரே ஒரு அணி மட்டும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதன்பின் 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களையும், இரு பிரிவுகளிலும் அடுத்த சிறந்த அணியையும் சேர்த்து மொத்தம் 7 அணிகள் ‘சூப்பர் 7’ சுற்றுக்கு தகுதி பெறும்.

- Advertisement -

டி20 உலகக் கோப்பையிலும் முக்கிய மாற்றம்

டி20 உலகக் கோப்பையிலும் ரசிகர்கள் நீண்ட நாட்களாக பார்த்து வந்த வடிவம் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை முதல் சுற்றுக்கு பிறகு ‘சூப்பர் 8’ சுற்று நடைபெற்றது. ஆனால் 2028 உலகக் கோப்பை முதல் அதற்கு பதிலாக ‘சூப்பர் 10’ சுற்று அறிமுகமாகிறது.

20 அணிகள் முதல் சுற்றில் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சேர்ந்து மொத்தம் 10 அணிகள் ‘சூப்பர் 10’ சுற்றுக்கு முன்னேறும். அங்கிருந்து இரண்டு பிரிவுகளாக பிரிந்து விளையாடி, முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு செல்லும். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் அணிகள் ‘எலிமினேட்டர்’ நாக் அவுட் போட்டியில் மோதும். அந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகள் மீதமுள்ள இரண்டு அரையிறுதி இடங்களை கைப்பற்றும்.

- Advertisement -

இந்த புதிய வடிவத்தின் மூலம் ஒவ்வொரு போட்டிக்கும் அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 2028 டி20 உலகக் கோப்பிக்கான தகுதிச் சுற்று முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இணை உறுப்பு (Associate) நாடுகளுக்கு உலகக் கோப்பையில் இடம் பெறும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

- Advertisement -