நல்லவேளை விராட் கோலி ஒதுங்கிட்டாரு.. இல்லனா இந்திய அணியில் இன்னும் அந்த குழப்பம் இருந்திருக்கும் – ரவிச்சந்திரன் அஸ்வின்

0
310

நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றை உறுதி செய்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் அந்த அணிக்கு எதிராக விளையாடிய ஆர்சிபி வீரர் விராட் கோலி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பொறுத்த வரை இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி 14 போட்டிகளில் ஒன்பது போட்டிகள் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. அந்த அணியில் தற்போது பல வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்தாலும் விராட் கோலி இன்னும் தனது ஆட்டத்தை தொடர்ந்து நிலையாக விளையாடி வருகிறார்.

ஆரஞ்சு கோப்பை பட்டியலில் இருக்கும் விராட் கோலி, கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில் அவரது தற்போதைய விளையாட்டை கவனித்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், இன்னமும் அவர் இந்திய அணியில் டி20 கிரிக்கெட் விளையாடுவதற்கு தகுதியான நபராகவே இருக்கிறார் என்று தொடக்க இடத்தில் போட்டி போடுவது குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் பேசும்போது “விராட் கோலி தொடக்க இடத்தில் விளையாடுவதற்கு தகுதியற்றவர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இன்னமும் அவர் அதே தொடக்க இடத்தில் பெங்களூர் அணிக்காக மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒருவேளை அவர் ஓய்வு பெற்றது இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிர்ஷ்டமாக இருக்கலாம். இல்லையென்றால் அவரும் இந்திய அணிக்கு தொடக்க வீரர்களில் ஒரு குழப்பமாக இருப்பார். ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு ஓரளவு சிறப்பாக விளையாட விட்டாலும் கடந்த ஆண்டு அவர் அற்புதமான டி20 கிரிக்கெட் விளையாடி இருந்தார்.

மேலும் தற்போது விளையாடி வரும் சிறுவன் வைபவ் சூரியவன்சி 220 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறான். அவன் கில்லை விடவும் சிறப்பானவன், சிறப்பாக விளையாடி வருகிறான். மேலும் சஞ்சு t20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடியதால் அவனை அவ்வளவு எளிதில் யாராலும் நீக்க முடியாது. அதேபோல அபிஷேக் ஷர்மாவும் சன்ரைசர்ஸ் அணிக்காக சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். குஜராத் அணிக்காக விளையாடி வரும் கில் சிறப்பாக இருந்தாலும் இந்திய அணியில் இடம் பிடிப்பது சற்று கடினமான விஷயமாகும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -