முதல் இன்னிங்ஸில் இருந்து.. சிஎஸ்கே பவுலர்கள் இதை யாருமே கத்துக்கல.. அதான் தோல்விக்கு காரணம்.. இந்திய முன்னாள் வீரர்

0
170

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மோகித் சர்மா சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் முதல் இன்னிங்ஸில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்று விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் நேற்று களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. இந்த ஆடுகளத்தில் இது வெற்றி பெறுவதற்கு போதுமான ரன்னாக இருக்கும் என்று பயிற்சியாளர்கள் கணித்திருந்தனர். அதுபோலவே சிஎஸ்கே அணியின் பந்து வீச்சும் முதல் ஆறு ஓவர்களுக்கு நன்றாக இருந்தது.

அதற்குப் பிறகு மிடில் வரிசையில் கிளாசன் மற்றும் இசான் கிஷன் பார்ட்னர்ஷிப்பை சிஎஸ்கே பந்து வீச்சாளர்களால் உடைக்க முடியாமல் போனதால் ஒரு ஓவர் மீதம் வைத்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மோகித் சர்மா சில முக்கிய விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்தப் போட்டியில் கிளாசன் மற்றும் இசான் கிஷன் கூட்டணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த இருவருமே சிறந்த வீரர்கள் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் அதே சமயம் சிஎஸ்கே பவுலர்கள் முதல் இன்னிங்ஸில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்று நான் கூறுவேன். சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் திட்டத்தை எவ்வாறு பயன்படுத்தியிருக்க வேண்டும் ஆடுகளத்திற்கு தகுந்தவாறு தங்கள் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர்கள் கற்றுக் கொள்ளவில்லை.

சன்ரைசர்ஸ் இந்த போட்டியில் மெதுவான பந்துகளை அதிகம் பயன்படுத்தியிருந்தது. அதாவது 60 முதல் 65 சதவீதம் வரை அவர்களது பவுலிங் திட்டம் இப்படித்தான் இருந்தது. அதை உங்களது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே பவுலர்கள் எதிர்கொள்வதற்கு கடினமாக இருந்தது. யார்க்கர் உங்கள் பலமாக இருக்கலாம். ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப சரியான லென்த்தில் வீசி இருந்தால் இந்த போட்டியின் முடிவு வேறு விதமாக மாறி இருக்கும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -