கேப்டனை மாற்ற போகும் 4 ஐபிஎல் அணிகள்.. இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என முடிவு – வெளியான புதிய தகவல்கள்

0
17
Shreyas

நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 10 அணிகளில் நான்கு அணிகளின் கேப்டன்களை மாற்ற அணி நிர்வாகங்கள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 70 சதவீதத்திற்கு மேல் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இதில் சில அணிகளின் கேப்டன்கள் செயல்பாடு மிகவும் சுமாரான நிலையில் உள்ளது. எனவே அவர்களை மாற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

முதல் இரண்டு கேப்டன்கள்

கடந்த மூன்று வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்து வருகிறார். ஆனால் மூன்று ஆண்டுகளும் மும்பை மிகவும் மோசமாக விளையாடி உள்ளது. மேலும் வீரர்கள் தனித்தனியாக பிரிந்து இருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியா முடிவுகள் மிகவும் மோசமாக இருந்து வருகிறது.

இதற்கு அடுத்து லக்னோ அனுப்பி மிகப்பெரிய விலை கொடுத்து ரிஷப் பண்ட் கேப்டனாக வாங்கப்பட்டார். ஆனால் அவருடைய தனிப்பட்ட பேட்டிங் மிகவும் சுமாராக கடந்த இரண்டு வருடங்களாக இருந்து வருகிறது. இத்துடன் அவரது கேப்டன்சி முடிவுகள் பவுலர்களை ரொட்டேட் செய்வதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

- Advertisement -

மற்ற இரண்டு கேப்டன்கள்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் செயல்பாடு மிகவும் சுமாராக உள்ளது. மேலும் அந்த அணியின் கேப்டன் ரகானே பேட்டிங் தனிப்பட்ட முறையில் சரியாக இல்லை. மேலும் அவர் டி20 வடிவத்திற்கு ஏற்றவர் இல்லை என்பதால் அவரை மாற்றுவது உறுதி என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா வீட்டை விட்டு வெளியே போனு மும்பை சொல்லிடுச்சு.. பும்ராவை பார்க்கவே பரிதாபமா இருக்கு – ஸ்ரீகாந்த் பேச்சு

மேலும் டெல்லியணியின் கேப்டனாக அக்சர் படேல் இருந்து வருகிறார். அவர் பவுலர்களை ரொட்டேட் செய்வதில் தடுமாறி வருகிறார். மேலும் டெல்லி பயிற்சியாளர்கள் குழுவே முடிவு எடுப்பதில் மிகவும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. எனவே இவரையும் மாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது.

- Advertisement -