இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய டெல்லி அணிக்கு கடைசி ஓவரின் 15 ரன்கள் தேவைப்பட்டபோது டேவிட் மில்லர் அடிக்க அந்த அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபாரமாய் தடுத்த டெல்லி
இந்த போட்டியில் பெங்களூர் மைதானத்தின் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தது. இதை பயன்படுத்தி டெல்லி பவுலர்கள் மிகவும் அருமையான முறையில் பந்து வீசினார்கள். குறிப்பாக நல்ல பார்மில் இருக்கும் ரஜத் படிதாருக்கு ஸ்பின்னர்களை கொண்டு வராமல் தடுத்து விட்டார்கள்.
மேலும் கடைசி கட்டத்தில் 4 ஓவர் களுக்கு வெறும் 6 ரன்கள் வீதம் ஓவருக்கு ஆர்சிபி எடுத்தது. அந்த அளவுக்கு டெல்லி பவுலர்கள் அவர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். பேட்டிங்கில் கேஎல்.ராகுல் மற்றும் ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம் அடித்தார்கள். கடைசி ஓவரில் டேவிட் மில்லர் சிறப்பாக ஆடி முடித்து வைத்தார்.
பவுலர்களிடம் இதை சொன்னேன்
இதுகுறித்து ரஜத் படிதார் பேசும்போது “இது மிகவும் நெருக்கமான போட்டியாகவே இருந்தது. நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஆரம்பத்தில் விராட் கோலி மற்றும் சால்ட் இருவரும் சிறப்பான முறையில் தொடங்கினார்கள். ஆனால் 12 ஓவர்களுக்கு பிறகு நாங்கள் சில விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவை கொடுத்தது.
இதையும் படிங்க : ஆர்சிபி-க்கு அக்சர் படேல் வைத்த அற்புத செக்.. மற்ற கேப்டன்கள் பார்த்து கத்துக்கோங்க – களத்தில் என்ன நடந்தது?
“முதல் ஓவரில் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தது. நாங்கள் போட்டியை கடைசி வரையில் கொண்டு சென்றது நல்ல அறிகுறி என்று நினைக்கிறேன். நான் எங்கள் பவுலர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது எதை செய்தாலும் தெளிவாக இருங்கள் என்று சொன்னேன். இது மிக நீண்ட தொடர். எனவே நாங்கள் திரும்பி சென்று எங்கு தவறு செய்தோம் என்று ஆராய்ந்து கண்டுபிடித்து சரி செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.






