சிஎஸ்கே அணி நிர்வாகம் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்திருக்கக் கூடாது என மைக்கேல் வாகன் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளையும் தோற்று இருக்கிறது. இந்த மூன்று தோல்விகளும் விதவிதமான முறையில் வந்திருக்கின்றன. மேலும் அணியில் வீரர்களிடம் போராடும் குணத்தை களத்தில் பார்க்க முடியவில்லை.
அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
தற்போது சிஎஸ்கே அணியில் பவுலிங் யூனிட் மிகவும் பரிதாபமாக உள்ளது. அவர்கள் பேட்டிங் யூனிட்டால் 200 ரன்கள் தாண்டி எடுக்க முடிகிறது. ஆனால் அவர்களது பவுலிங் யூனிட் 250 ரன்கள் தரக்கூடிய அளவில் உள்ளது. இது தற்போது பிரச்சினையாக மாறி உள்ளது.
இதுகுறித்து மைக்கேல் வாகன் பேசும்போது “சிஎஸ்கே போல தடுமாறும் அணிகள் களத்தில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு எங்கு நிற்பது என்று தெரியவில்லை. கேப்டன் களத்தில் கைகளை ஆட்டிக் கொண்டிருக்கிறார். அவர்களிடம் ஆக்ரோஷம் இல்லாத வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் பந்துவீச்சில் எந்தவித சிறப்பும் இல்லாததால், அவர்களை எளிதாக கடந்து சென்று விட முடிகிறது”
ஜடேஜாவை விட்டது தவறு
“அவர்கள் ஐபிஎல் தொடரை வென்ற பொழுது மிகச் சிறந்த கேப்டனான மகேந்திர சிங் தோனி இருந்தார். அவர் கீழ் வரிசையில் பேட்டிங் வந்து போட்டிகளை வெற்றி பெற்று கொடுத்தார். தற்போது அவர்களுடைய பந்து வீச்சு மோசமாக இருக்கிறது. இதுதான் அவர்கள் டாப் ஆர்டர் சரியாக செயல்படாத காரணம்”
இதையும் படிங்க : நான் ஆட முடியாம போனதுக்கு சிஎஸ்கேதான் காரணம்.. போன வருஷம் அங்க ரொம்ப ஏமாந்து போனேன் – அஸ்வின் பேச்சு
“சிஎஸ்கே ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்தது மிகவும் தவறான ஒரு விஷயம். நீங்கள் புதிய வீரர்களை உருவாக்க விரும்பினால் உங்களுக்கு அடிப்படையில் அனுபவமும் தேவை. ஜடேஜா இருந்திருந்தால் அவருடைய அனுபவத்தை பந்து வீச்சில் உங்களுக்கு கொடுத்து இருப்பார். தற்போது சிஎஸ்கே அவரை தவற விடுகிறது” என்று கூறி இருக்கிறார்.






