யாராவது சோகமான பாட்டு எனக்கு சொல்றீங்களா.? சிஎஸ்கேவை பார்த்தாலே மோசமா இருக்கு – அஸ்வின் வேதனை

0
49

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை தோற்கடித்தது.

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே தோல்வி அடைந்த விதம் குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 250 ரன்கள் குவித்தது. பவர் பிளேவரை 50 ரன்கள் குவித்த நிலையில் அதற்குப் பிறகு ருத்ர தாண்டவம் ஆடியது. இறுதிக்கட்டத்தில் டிம் டேவிட் 25 பந்துகளில் 70 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அதற்குப் பிறகு பேட்டிங் செய்த சிஎஸ்கே 200 ரன்கள் வரை குவித்து இறுதியில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து ஆட்டம் இழந்தது. 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி மற்ற அணிகளுக்கு தங்களின் தரம் குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே விளையாடிய விதம் குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த சமயத்தில் சோகமான பாடல்கள் ஏதேனும் பரிந்துரைக்க முடியுமா? நான் இந்த போட்டியை நடுநிலையான கண்ணோட்டத்தில் இருந்து தான் பார்த்து வருகிறேன். ஆனால் சமீபத்தில் சிஎஸ்கே அணியோடு நான் ஒரு ஏமாற்றம் அளிக்கும் சீசனை வெளிப்படுத்தினேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு அதுவும் ஏமாற்றம் அளிக்கும் விதமாகவே அமைந்தது. உண்மையைச் சொல்லப் போனால் என் மனதளவில் நான் இன்னும் அதிகமாக விளையாடியிருக்க முடியும்.

ஆனால் உணர்வு ரீதியாக விளையாடுவதற்கோ மனநிலையோ அல்லது ஆற்றலோ அப்போது என்னிடம் இருக்கவில்லை. பெங்களூர் அணி இடம் வலிமை இருக்கிறது என்று எனக்கு முன்பே தெரியும் ஆனால் அவர்கள் சிறிது இடைவெளி விட்டு வருவதால் சற்று பின்னடைவை சந்திப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் இன்று விளையாடிய விதத்தை பார்த்தால் மற்ற அணிகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கை கொடுக்கிறார்கள்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -