சாம்சன் ஆர்சிபியை விடமாட்டார்.. ஆனா விராட் கோலி உங்கள அந்த விஷயத்துல டயர்ட் ஆக்குவார் – இர்பான் பதான் கணிப்பு

0
12
Virat

இன்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் ரன்கள் குவிப்பார் என தான் நம்புவதாக இர்பான் பதான் கூறியிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு இரு அணி ரசிகர்களாலும் சமூக வலைதளத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு போட்டிக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

தோனியின் அடுத்த முகம்

இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவார் என்று பரவலாக பலரும் கூறி வருகிறார்கள். அவருக்கு அடுத்தபடியாக அவருடைய இடத்தில் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி நிர்வாகம் உருவாக்க நினைக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சஞ்சு சாம்சன் டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய தொடர் நாயகன் விருது வென்றார். எனவே சிஎஸ்கே அணிக்கு பெரிய ரன்கள் குவிப்பார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் கடந்த இரண்டு போட்டிகளாக அவரால் ரன் எடுக்க முடியவில்லை.

- Advertisement -

விராட் கோலி விடமாட்டார்

இது குறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “இன்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் சஞ்சு சாம்சன் ரன்கள் எடுப்பார் என்று நான் நினைக்கிறேன். அவரை தோனிக்கு அடுத்து அவருடைய முகமாக உருவாக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முயற்சி செய்வது வெளிப்படையாக தெரியக்கூடிய ஒன்று”

இதையும் படிங்க : 4 ஓவர் வெறும் 9 ரன்.. ஷமியின் வேற லெவல் பிளான் பவுலிங்.. கம்பீருக்கு என்ன கோபம்? மனம் மாறுவார்களா

“விராட் கோலி கடந்த போட்டியில் 182 ஸ்டிரைக் ரேட்டில் ரன்கள் குவித்ததை பார்த்தால் அவருக்கு 37 வயது என்று தெரியவில்லை. அவர் களத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவர் களத்தில் வேகமாக ஓடுவதை பார்த்தால் நமக்கு தான் களைப்பாக இருக்கும். ஆனால் அவர் களைப்பாக மாட்டார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -