ஆர்சிபி இன்னைக்கு கட்டாயம் தோற்கும்.. அதுக்கு முக்கிய காரணம் இதுதான்.. ஹைதராபாத் கலக்கும் – அஸ்வின் கணிப்பு

0
5
Ashwin

இன்று ஐபிஎல் 19வது சீசன் துவங்குகிறது. முதல் போட்டியில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டியில் ஆர்சிபி அணி தோல்வி அடையும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடருக்கு ஆர்சிபி அணி நடப்பு சாம்பியனாக உள்ளே வருகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆர்சிபிக்கு பின்னடைவு

கடந்த முறை ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேஸில்வுட் முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் அவர் இன்று துவங்கும் முதல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் யூனிட் மிகவும் வலிமையாக காணப்படுகிறது. தற்போது இஷான் கிஷான் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கிறது.

- Advertisement -

ஆர்சிபி தோல்வியடையும்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “சமீபத்திய ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்று இருக்கிறது. அதுவும் ஒரு விசித்திரமான காரணத்தினால் வென்று இருக்கிறது. அப்படி கடைசியாக ஹைதராபாத் ஆர்சிபி அணியை வென்ற போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் விளையாடவில்லை. எனவே இன்றைய போட்டியிலும் அவர் விளையாடாததால் ஹைதராபாத் வெற்றி பெறும்”

இதையும் படிங்க: 2026 ஐபிஎல் தோனி ஆட மாட்டார்.. சிஎஸ்கே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை.. இடையில் என்ன நடந்தது?

“இந்த ஆட்டத்தை பற்றி எனக்கு ஒரு கணிப்பு உள்ளது. இந்த போட்டி ஆர்சிபி அணிக்கு கடினமானதாக இருக்கலாம். அவர்கள் தங்கள் ஆட்ட திறனை வெளிப்படுத்துவார்கள். இறந்தபோதிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தான் ஆதிக்கம் செலுத்தும். ஆர்சிபி தோல்வியடையும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -