இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி தெரிவித்த கருத்துக்கு யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் பதிலடி கொடுத்திருக்கிறார்.
தற்போது ஐபிஎல் தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர் லக்னோ அணியால் வாங்கப்பட்டிருக்கிறார். எனவே மும்பை அணியில் கிடைக்காத வாய்ப்பு லக்னோ அணியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யோக்ராஜ் சிங் எதிர்ப்பு
இந்த நிலையில் தற்போது லக்னோ அணியில் இருக்கும் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடுவதற்கு வாய்ப்பு மிகக் குறைவு என்றும் அவருடைய திறமை குறித்தும் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து யோக்ராஜ் சிங் பேசும்பொழுது “இந்த அஸ்வின் யாராக இருந்தாலும் சரி அவன் உளறுகிறான். ஒருவரைப் பற்றி எப்படி பேசுகிறோம் என்று அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஒருவர் தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு அவரால் இதைச் செய்ய முடியாது அதை செய்ய முடியாது என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் சொல்ல நீங்கள் முதலில் யார்?”
யுவராஜ் சிங்கிடமே கூறினேன்
“அர்ஜுன் டெண்டுல்கர் பந்து வீச்சாளர் கிடையாது என யுவராஜ் சிங்கிடம் ஏற்கனவே நான் தெரிவித்தேன். அவரது முதுகு 45 டிகிரி வளைகின்ற காரணத்தினால் இது முடியாது. மேலும் கோவா அணிக்கு அவர் விளையாடும் பொழுதும் அந்த அணியின் பயிற்சியாளர் இடமும் நான் இதைக் கூறினேன்”
இதையும் படிங்க : தோனி கிட்ட நேரடியா இந்த விஷயம் பற்றி பேசுவேன்.. ஆனா மீடியா உங்ககிட்ட நான் பேசமாட்டேன் – சவுரவ் கங்குலி கருத்து
“உங்களால் முடியவில்லை என்றால் அர்ஜுன் டெண்டுல்கரை என்னிடம் மீண்டும் அனுப்புங்கள். அவர் என்னிடம் ஆறு மாத காலம் பயிற்சி எடுத்தால் உலகத்தில் எல்லா பேட்ஸ்மேன்களையும் விஞ்சி விடுவார் என்று நான் இந்த உலகத்திற்கு சவால் விடுகிறேன். இல்லையென்றால் என் தாடியை வெட்டி எறிந்து விடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






