அடுத்த ரெண்டு நாள் என்னனு ஏற்கனவே முடிவு பண்ணிட்டோம்.. ஐபிஎல்க்கு இப்படித்தான் வருவோம் – திலக் வர்மா தகவல்

0
11
Tilak

நேற்று இந்தியா அணி டி20 உலக கோப்பை தொடரை நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்றது. இந்த வெற்றி குறித்து அணியின் இளம் வீரர் திலக் வர்மா பேசியிருக்கிறார்.

மேலும் கடந்த இரண்டு போட்டிகளாக இந்திய அணியின் பீல்டிங் மிகவும் சிறப்பான முறையில் இருந்து வருகிறது. இது குறித்த கேள்விகளுக்கு திலக் வர்மா வித்தியாசமான முறையில் பதில் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

மாற்றப்பட்ட இடம்

இந்த உலகக் கோப்பை தொடரில் திலக் வர்மா முதலில் பேட்டிங் ஆர்டரில் மூன்றாவது இடத்தில் விளையாடி வந்தார். ஆனால் அந்த இடத்தில் எதிர்பார்த்த அளவுக்கு அவரால் அதிரடியாகவும் விளையாட முடியவில்லை பெரிய ரன்களும் கொண்டு வர முடியவில்லை.

இதைத் தொடர்ந்து அவர் கீழ் வரிசைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் கீழ் வரிசையில் அவரிடமிருந்து அதிரடியாக ரன்கள் வர ஆரம்பித்தது. குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான செமி பைனலில் அவரது இறுதி கட்ட அதிரடி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிகவும் உதவியாக அமைந்தது.

- Advertisement -

இதுதான் திட்டம்

இது குறித்து திலக் வர்மா கூறும் பொழுது “எங்களுடைய பீல்டிங் மோசமாக இருக்கவில்லை. நான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். முக்கியமான போட்டிகளில் எங்கள் வீரர்கள் எப்பொழுதும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அக்சர் படேல் கடந்த போட்டியில் சிறப்பாக இருந்தார். இன்று இஷான் சிறப்பான பீல்டிங் செய்தார். இன்று நான் செய்தது மிகச் சிறப்பான பீல்டிங் என்று சொல்ல முடியாது. ஆனால் சில நல்ல கேட்ச் பிடித்தேன்”

“இந்த உலகக் கோப்பையை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் உலகக் கோப்பையை வென்றதும் அடுத்த இரண்டு நாட்கள் பெரிய பார்ட்டி செய்ய வேண்டுமென நாங்கள் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருக்கிறோம். எனவே நாங்கள் பெரிய கொண்டாட்டங்களில் ஈடுபட போகிறோம். இதற்கு அடுத்ததால் நாங்கள் ஐபிஎல் தொடருக்கு தயாராக ஐபிஎல் அணிகளில் இணைவோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -