இந்திய அணியின் 11 வீரர்களை விட பும்ரா இந்த விஷயத்தில் மிகச் சிறந்து விளங்குகிறார்.. அதனால்தான் அவர் பும்ரா – ஆகாஷ் சோப்ரா

0
44

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று விதம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் அடங்கும். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது.

கிட்டத்தட்ட வெற்றிக்கு மிக அருகில் இங்கிலாந்து அணி வந்த நிலையில் இறுதிக்கட்டத்தில் பும்ரா வீசிய இரண்டு ஓவர்கள் போட்டியை முக்கிய கட்டத்தில் மாற்றி இந்திய அணிக்கு வெற்றி வைத்து உருவாக்கி கொடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்த போட்டி குறித்த சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “நீங்க சொல்றது ஜீனியஸ் நான் சொல்றது பும்ரா. அவர் என்ன ஒரு திறமைசாலி. ஒரு நல்ல பவுலிங் ஸ்பெல் போட்டியை முற்றிலும் மாற்றி விடும். ஹர்திக் பாண்டியாவின் ஸ்பெல் கூட நீங்கள் இதே மாதிரி சொல்லலாம். ஆனால் பும்ரா இதில் எந்த வகையில் வேறுபடுகிறார் என்றால் அவரால் மிகக் கடினமான நான்கு ஓர்களை கூட வீச முடியும்.

அவர் கடைசியில் இரண்டு ஓவர்கள், நடுவில் ஒரு ஓவர், பவர் ப்ளேவில் ஒரு ஓவர் என்ற பேசுகிறார் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஜாஸ்ஸி மாதிரி வேறு எந்த ஒரு பிளேயரும் கிடையாது. அவர் இதை மீண்டும் எங்களுக்கு ஒருமுறை நினைவுபடுத்தி இருக்கிறார் அவர் இல்லை என்றால் நிச்சயமாக இந்த ஆட்டத்தில் எங்களால் வெற்றி பெற்றிருக்க முடியாது மேலும் அது மட்டும் இல்லாமல் கோப்பைக்கு அருகிலும் வந்திருக்க முடியாது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -