இங்கிலாந்து கிட்ட செமி பைனல்ல இந்த பவுலிங் பிளான் கட்டாயம்.. இல்லனா தோத்துப் போயிடுவோம் – தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை

0
33
DK

இந்திய அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை மறுநாள் மும்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக செமி பைனலில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கு இந்திய அணியின் பந்துவீச்சு திட்டம் எப்படி இருக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

தற்பொழுது இங்கிலாந்து அணி சிறப்பான முறையில் விளையாடி செமி பைனலுக்கு தகுதி பெற்று இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் ஹாரி புரூக் சிறப்பான பேட்டி வெளிப்படுத்தி முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதைச் செய்ய வேண்டும்

தற்போது இங்கிலாந்து அணியில் துவக்க இடம் பலவீனமாக உள்ளது. சால்ட் மற்றும் பட்லர் இருவரும் தடுமாறி வருகிறார்கள். இதற்கு அடுத்து வரக்கூடிய கேப்டன் ஹாரி புரூக் மட்டுமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். பிறகு மிடில் ஆர்டரும் பலவீனமாக உள்ளது. இறுதிக்கட்டத்தில் வில் ஜேக்ஸ் சிறப்பாக விளையாடுகிறார்.

இதை வைத்து தினேஷ் கார்த்திக் பேசும் பொழுது “தற்போது இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே மிகுந்த தடுமாற்றத்தில் இருக்கிறார்கள். இப்போதைக்கு இங்கிலாந்து அணியில் சிறந்த பேட்ஸ்மேனாக அவர்களது கேப்டன் புரூக் இருந்து வருகிறார். இதன் காரணமாக நான் மிக முக்கியமாக பும்ராவை பந்துவீச்சுக்க மிகவும் தாமதமாக தான் எடுத்துக் கொண்டு வருவேன். இதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்”

- Advertisement -

இவர்களால் நடக்க வேண்டும்

“இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு அர்ஸ்தீப் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருமே போதுமானவர்களாக இருப்பார்கள். இதற்கு அடுத்து நாம் புரூக் வரும்பொழுது நம்முடைய பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரையும் வைத்து அவரை சீக்கிரத்தில் ஆட்டம் இழக்க வைக்க வேண்டும். இதுதான் இந்திய அணியின் திட்டமாகவும் இருக்க வேண்டும்”

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் செமி பைனலில் ஆடுவதில் ஏற்பட்ட சிக்கல்.. ஐசிசி எடுக்கும் நடவடிக்கை – வெளியான புதிய செய்திகள்

“அதே சமயத்தில் இந்திய அணியின் பீல்டிங் மிகவும் சுமாராக இருந்து வருகிறது. பீல்டிங் என்பது ஒரு அணுகுமுறை. அது ஒரு குணத்தைக் காட்டுகின்ற முறை. அணிக்காக சுயநலமில்லாமல் தெளிவாக களத்தில் உழைப்பதற்கான அடையாளம். நாம் புலப்பத்தில் இருந்தால் அது பீல்டிங்கில் நிச்சயம் எதிரொலிக்கும். தற்போது இந்திய அணிக்கு அதுதான் நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -