நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அவுட் ஆனது நல்ல விஷயம் என இந்திய முன்னால் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா மிகவும் தடுமாற்றத்துடன் இருந்தார். மேலும் அவர் பத்து பந்துகளை சந்தித்து பத்து ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 50 பந்தில் 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
அவுட் ஆனது நல்லது
இதுகுறித்து அபிஷேக் நாயர் பேசும் பொழுது ” டி20 கிரிக்கெட்டில் ஒரு தொடக்க ஆட்டக்காரரை குறைவான பந்தில் எவ்வளவு ரன்கள் எடுத்து துவக்கத்தை கொடுக்கிறார் என்றுதான் மதிப்பிடுகிறார்கள். ஒருவேளை நீங்கள் ரங்கள் எடுக்க முடியாவிட்டால் வெளியேறுங்கள் அடுத்தவர் எடுப்பார் என்பதுதான் அங்கு முக்கிய விஷயம். ஷாய் ஹோப் முழு பவர் பிளே விளையாடினார் ஆனால் அவரால் ரன்கள் எடுக்க முடியவில்லை”
“அபிஷேக் சர்மா 10 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து மாட்டிக்கொண்டிருந்த பொழுது அவர் அவுட் ஆனது நல்ல விஷயம்தான். மேலும் அவர் இன்னும் அங்கு ஆடிக் கொண்டிருந்தால் மற்றவர்கள் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. அபிஷேக் சர்மா அணியின் ரன் ரேட்டை உயர்த்துவதற்கு முயற்சி செய்து ஆட்டம் இழந்தார். இது நல்ல விஷயம்தான்”
திலக் வர்மா அருமை
“திலக் வர்மா சிறப்பாக விளையாடினார் அது ஒரு அருமையான ஆட்டம். ஏனென்றால் அவர் முதல் இரண்டு மூன்று பந்துகளுக்கு ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. பிறகு ஜோசப் பின் ஓவரில் அவர் அடித்து விளையாட ஆரம்பித்ததும் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்கின்ற நம்பிக்கை உருவாகிவிட்டது”
இதையும் படிங்க : உகோ முன்பு.. சாம்சனுக்கு ரோகித் சர்மா சொன்ன வார்த்தைகள்.. அப்படியே நடந்த ஆச்சரியம்.. வெளியான புதிய செய்திகள்
“திலக் வர்மா அந்த நேரத்தில் உள்ளே வந்து அதிரடியாக விளையாடியது செட்டில் ஆகி இருந்திருந்த சஞ்சு சாம்சனுக்கு ரன் பிரஷரை எடுத்து விட்டது. எப்பொழுதும் உங்களுடன் விளையாடும் பேட்டர் பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஏனென்றால் உங்கள் வேலை அங்கு எளிதாகிவிடும்” என்று கூறியிருக்கிறார்.






