இன்று இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றிக்கான காரணங்கள் குறித்து இந்திய அணியின் கேப்டன் சூரியகுமாரி யாதவ் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாங்கள் மறக்க நினைத்தோம்
இந்த போட்டி குறித்து பேசிய சூரியகுமார் யாதவ் கூறும் பொழுது “நாங்கள் முதல் சுற்றிலும் அடுத்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராகவும் என்ன நடந்தது என்பதை விட்டு விட விரும்பினோம். எங்களுடைய வீடியோ அனலிஸ்ட் கடந்த இரண்டு வருடங்களில் எங்கள் பேட்ஸ்மேன்கள் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்ட விஷயங்களை வீடியோவாக எடுத்து தொகுத்து கொடுத்தார். அதைப் பார்த்த எங்களுக்கு நல்ல பாசிட்டிவான எண்ணம் உருவானது. அதிலிருந்து தெளிவான மனநிலையுடன் வந்தோம்”
“எங்களுடைய பேட்டிங் வரிசையில் ஏழாவது இடம் வரையில் எல்லாமே சிறப்பான பங்களிப்பு கொடுக்கும்படி இருந்ததால் எங்களுக்கு எந்த குறையும் இல்லை. ஆனால் பந்துவீச்சில் இன்னும் கொஞ்சம் துல்லியமாக இருந்திருக்கலாம். இருந்த போதிலும் வெற்றி என்பது வெற்றிதான். இதை எடுத்துக் கொண்டு நாங்கள் அடுத்த போட்டிக்கு நம்பிக்கை உடன் செல்வோம்”
ஜிம்பாப்வே சிறப்பாக விளையாடினார்கள்
“மேலும் இந்த போட்டியில் ஜிம்பாப்வே பேட்டிங் சிறப்பாக இருந்தது. அவர்கள் முதலில் பொறுமையை காட்டி பிறகு புத்திசாலித்தனமாக அடித்து விளையாடி ரன் எடுத்தார்கள். இதற்கான பாராட்டுகள் அவர்களுக்கு சேரும். அவர்கள் செயல்பட்ட விதத்தை நான் குறைத்துக் காட்ட விரும்பவில்லை”
இதையும் படிங்க : 256 ரன்.. டி20 உலக கோப்பையில் இந்தியா வரலாற்று சாதனை.. விழி பிதுங்கிய ஜிம்பாப்வே.. ஃபார்முக்கு வந்த வீரர்கள்
“அதே சமயத்தில் பந்துவீச்சில் நாங்கள் சில தருணங்களில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நீங்கள் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும். நீங்கள் பாசிட்டிவாக இருப்பதை தவிர வேறு வழி இல்லை. அடுத்த போட்டிக்கு கொல்கத்தா சென்று ஓய்வெடுத்து திட்டங்கள் தீட்டுவோம்” என்று கூறியிருக்கிறார்.






