தற்போது பாகிஸ்தான் வீரர் சதாப் கான் முன்னாள் வீரர்கள் குறித்து பேசியது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் மோகித் சர்மா பேசியிருக்கிறார்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. பாகிஸ்தான் அணியில் நிறைய சுழல் பந்துவீச்சாளர்கள் இருந்ததால் போட்டியில் நிறைய எதிர்பார்ப்புகளும் இருந்தது. ஆனால் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி படுதோல்வி அடைந்தது.
சதாப் கான் விமர்சனம்
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் குறித்து வெளியில் மிகவும் கடுமையாக விமர்சனத்தை ஆரம்பித்தார்கள். இது பாகிஸ்தான் அணி வீரர் சதாப் கானை மிகவும் கோபப்படுத்தி விட்டது.
இதைத்தொடர்ந்து சதாப் கான் உலகக் கோப்பையில் ஒரு முறையாவது இந்திய அணியை தங்களுடைய அணி தான் தோற்கடித்திருக்கிறது என்றும், முன்னாள் வீரர்கள் விளையாடிய காலத்தில் இந்திய அணியை உலக கோப்பையில் அவர்களால் தோற்கடிக்க முடியவில்லை என்றும் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருந்தார். இது பெரிய பிரச்சனையாக பாகிஸ்தான் கிரிக்கெட் மட்டத்தில் உருவாகியுள்ளது.
மோகித் சர்மா விளக்கம்
இதுகுறித்து பேசி உள்ள மோகித் சர்மா கூறும் பொழுது “பாகிஸ்தான் வீரர்கள் இன்னும் கடந்த காலத்தில் சிக்கிக் கொண்டு தொடர்ந்து அதையே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பற்றி எந்த கவலையும் படவில்லை. இந்தியாவை யார் தோற்கடித்தார்கள் தோற்கடிக்கவில்லை என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாம் எப்படி விளையாட வேண்டும் முன்னேற வேண்டும் என்பது குறித்து அவர்கள் பேசவில்லை. அவர்கள் இந்தியாவைப் பற்றி பேசுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : அபிஷேக் ஹாட்ரிக் டக் அடிச்சது நல்ல விஷயம்தான்.. இந்தியா டீமை மாத்தாத காரணம் இதுதான் – ரவி சாஸ்திரி பேச்சு
“நீங்கள் பேசுவது எதிர் அணியை வெல்வது மற்றும் தோற்கடிப்பது பற்றி இல்லை என்றால் நீங்கள் முன்னேறவே முடியாது. பாகிஸ்தான் அணி கடந்த காலத்திலேயே வாழ்கிறார்கள். அவர்களால் எதிர்காலத்தில் முன்னேற முடியும் என்று நான் நினைக்கவில்லை” எனக் கூறியிருக்கிறார்.






