ஹர்திக்கை முதன்முதலா நான் சந்தித்ததும்.. உங்க அம்மாவுக்கு முதல்ல நன்றி சொல்லுங்கன்னு சொன்னாரு.. அப்ப எனக்கு புரியல – தமிழக வீரர் சாய் சுதர்சன்

0
72

இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த உடன் 19வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா துவங்க உள்ளது.

இதற்காக ஐபிஎல் அணிகள் தயாராகி வரும் நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன், தன் முதல் ஆண்டு ஐபிஎல் அனுபவம் குறித்த சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் ஓரிரு வாரங்களில் தூங்க உள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற நடைபெற உள்ளதால் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய வீரரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரருமான சாய் சுதர்சன் தனது முதல் வருட ஐபிஎல் அனுபவம் குறித்த சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். தான் குஜராத் அணியில் முதன் முதலாக கேப்டன் ஹர்திக் பாண்டியாவை சந்தித்ததாகவும், அப்போது அவர் முதலில் உங்கள் அம்மாவிற்கு வணக்கம் சொல்லுங்கள் என்று தன்னிடம் கூறியதாகவும் சில உணர்ச்சிகரமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “குஜராத் அணியில் நான் முதன் முதலில் சந்தித்தவர் கேப்டன் ஹார்திக் பாண்டியா. அப்போது அவரை என்னிடம் முதலில் ‘உங்கள் அம்மாவிற்கு வணக்கங்கள் கூறுங்கள்’ என்றார். அதுதான் என்னுடைய முதல் உரையாடல். எனது அம்மாவும் விளையாட்டு வீராங்கனை என்பதால் அவருக்கும் ஹர்திக் பாண்டியா அவருக்கும் ஒரே பயிற்சியாளராக இருந்திருக்கிறார்கள். அதனால் என் அம்மா அவரிடம் என்னைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.

அப்போதுதான் அவர் என்னிடம் அதைப் பற்றி கூறியிருந்தார் அதுதான் என் முதல் ஐஸ் பிரேக்கர் மூமென்ட். குஜராத் அணியில் முக்கியமான விஷயம் என்றால் உங்களை எப்படி அந்த அணியில் உணர வைக்கிறார்கள் என்பதும் நீங்கள் அந்த அணியில் சேர்ந்தவர் என்பதை மற்றவர்கள் எப்படி உணர வைக்கிறார்கள் என்பதும் தான். என் வாழ்க்கையிலேயே நான் அனுபவித்த மிகப்பெரிய விஷயம் இதுதான்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -