ஹர்திக் பாண்டியா இருப்பதால்தான் எதிரணி கேப்டன் இத பிளான் பண்ண முடியாம மாட்டுறாங்க – முகமது கைஃப்

0
128

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை தொடரின் அடுத்த சுற்று ஆட்டம் விரைவில் துவங்க இருக்கிறது.

இதற்காக இரண்டு அணி வீரர்களும் மிகவும் தீவிரமாக தயாராகி வரும் வேலையில், ஹர்திக் பாண்டியா குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி இந்த தொடரில் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று முதல் சுற்று முடிவில் முதல் இடத்தை இருக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் வரிசையில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா மற்றும் சிவம் தூபே என அதிக அளவில் இடது கை ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சூரியகுமார் யாதவ் ஹர்திக் பாண்டியா மட்டுமே வலது கை ஆட்டக்காரர்களாக இருக்கிறார்கள்.

இதில் ஹர்திக் பாண்டியா இந்த பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் களம் இறங்கி விளையாடுவது எதிரணி பவுலர்களுக்கு எளிதாகி விடுவதாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கை பேசியிருக்கிறார். அதாவது பெரும்பாலும் இந்திய வீரர்கள் இடது கை ஆட்டக்காரர்களாக இருப்பதால் எதிரணி திட்டம் தீட்டுவதற்கு எளிதாகி விடுவதாக சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “ஹர்திக் பாண்டியா ஏன் ஐந்தாவது இடத்தில் வருகிறார்?. பாண்டியா வழக்கமாக ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வதில்லை. டெல்லி போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக இடது கை ஆட்டக்காரர்கள் அதிகமாக இருந்ததால் அவர் ஐந்தாவது இடத்தில் இறங்கி பேட்டிங் செய்தார். எனவே இடது மற்றும் வலது சேர்க்கை காரணமாக இடது மற்றும் வலது கை வீரர்களை சமநிலைப்படுத்த அவர் மேலே செல்ல வேண்டியிருந்தது

இது ஒரு பிரச்சனை ஏனென்றால் இவ்வளவு இடது கை வீரர்கள் இருந்தால் அது எதிரணி வீரர்கள் திட்டமிடுவதற்கு எளிதாகி விடுகிறது. இந்த விஷயத்தில் ரிங்கு சிங்கை பாராட்டியே ஆக வேண்டும். அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்துகிறார். அவர் களமிறங்கும் போது ஒன்று அல்லது இரண்டு பந்துகள் கிடைத்தாலும் அதனையும் ரன்னாக மாற்றுவதில் சிறப்பு வாய்ந்தவராக இருக்கிறார். இப்படிப்பட்ட வீரர் கிடைப்பது அணியின் சொத்து” என்று பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -