இந்தியா பாகிஸ்தான் போட்டியில் மழை அச்சுறுத்தல்.. திட்டமிட்டபடி மேட்ச் நடக்குமா? – வெளியான தகவல்கள்

0
8
Surya

இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வந்த செய்தி ரசிகர்களை பெரிய அளவில் கவலைப்பட வைத்திருக்கிறது.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நாளை இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டி பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது.

- Advertisement -

போட்டியின் முக்கியத்துவம்

இந்தப் போட்டி தற்போது மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் டி20 அணியின் வலிமை என்ன என்பதை காட்டுவதாக இருக்கும். மிகக்குறிப்பாக சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் 6 சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து பாகிஸ்தான் விளையாடும். எனவே அவர்களுடைய சுழல் பந்துவீச்சாளர்களின் தரம் எப்படி ஆனது என்று தெரிந்து கொள்ள முடியும்.

அதே சமயத்தில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் அதிரடியான இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளித்து விளையாடுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இதன் காரணமாக இந்த இரண்டு அணிகளுக்குமே இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக மாறி இருக்கிறது.

- Advertisement -

மழை வாய்ப்பு எப்படி?

தற்போது இலங்கை வானிலை மையத்தில் இருந்து வங்காளவிரிகுடாவில் கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியின் போது மழை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : உஸ்மான் தாரிக் பவுலிங் இப்படி விளையாடுங்க.. கண்டிப்பா நாம பாகிஸ்தான ஜெயிப்போம் – ஹர்பஜன் சிங் பேச்சு

இந்த போட்டி நடைபெறும் நாளில் மாலை 6:00 மணி முதல் 8 மணி வரையில் மழை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையை பொறுத்த வரையில் முழு மைதானத்தையும் தார்பாய்கள் கொண்டு மூடப்படுவது வழக்கம். இதன் காரணமாக அடுத்த இருபதாவது நிமிடத்தில் போட்டியை துவங்கி விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -