IND vs NAM.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. அபிஷேக் ஆடுவாரா? பாகிஸ்தான் போட்டிக்கு ஸ்கெட்ச் – முழு அலசல்

0
3
Surya

2026 டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை இந்திய அணி டெல்லி மைதானத்தில் நமிபியா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவலில் மாற்றம் நடப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டாவது போட்டி நாளை நடைபெறுகிறது. இதற்கு அடுத்து மிக முக்கிய போட்டியாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பு மைதானத்தில் விளையாடுகிறது.

- Advertisement -

அபிஷேக் ஆடுவாரா?

தற்போது இந்திய அணியின் நட்சத்திர அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் நாளை விளையாடுவது சந்தேகம் என்று கூறி வருகிறார்கள். எனவே அவருடைய இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாட வைக்கப்படுவார்.

அதே சமயத்தில் கடந்த போட்டியில் காய்ச்சல் காரணமாக இடம்பெறாத பும்ரா சமீபத்தில் பயிற்சிக்கு திரும்பி வந்துவிட்டார். இதன் காரணமாக பும்ரா நாளை களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக முகமது சிராஜை வெளியில் உட்காருவது உறுதி.

- Advertisement -

பாகிஸ்தானுக்காக திட்டம் போடப்படுமா?

இதற்கு அடுத்த போட்டி பாகிஸ்தான் அணிக்கு எதிராக கொழும்புவில் நடைபெற இருக்கிறது. இங்கு மைதானம் பெரியதாக இருப்பதோடு ஆடுகளம் சுழல் பந்துவீச்சிக்கு சாதகமாக இருக்கும். எனவே அர்ஸ்தீப் சிங்கை வெளியில் வைத்து விட்டு குல்தீப் யாதவை விளையாட வைப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக நாளையே குல்தீப் யாதவை விளையாட வைப்பது நல்லது. இதில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை.

இதையும் படிங்க : 182 ரன்.. 6 நட்சத்திர வீரர்கள் இல்லை.. ஆனா நாங்க ஆஸி.. இலங்கை மண்ணில் வேற மாதிரி வெற்றி

இந்திய பிளேயிங் லெவன்: இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், அர்ஸ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் பும்ரா.

- Advertisement -